» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வெள்ள நீரை அகற்ற கோரி மக்கள் சாலை

ஞாயிறு 28, நவம்பர் 2021 2:09:05 PM (IST)



தூத்துக்குடியில் கனமழையால் குடியிருப்பு பகுதிகளிலை தேங்கிய வெள்ள நீரை அகற்ற கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் சமீபத்தில் பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். ரோடுகளில் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால், வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. வீடுகளில் தங்க முடியாதவர்கள், விடிய, விடிய துக்கமின்றி தவித்தனர். இந்நிலையில் வெள்ள நீரை அகற்றக்கோரி முத்தம்மாள் காலனி பகுதி மக்கள் தூத்துக்குடி - மதுரை நெடுஞ்சாலையில சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 


மக்கள் கருத்து

ShnamugarajNov 28, 2021 - 02:53:45 PM | Posted IP 173.2*****

DMK Govt is failure to dewatering the Rain water

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory