» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கனமழையால் சாலை சேதம்: பஸ் போக்குவரத்து பாதிப்பு

ஞாயிறு 28, நவம்பர் 2021 10:25:49 AM (IST)விளாத்திகுளம் பகுதியில் கனமழையால் சாலை சேதம் அடைந்துள்ளதால் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையால் விளாத்திகுளம் தொகுதிக்கு உள்பட்ட எட்டயபுரம், நாகலாபுரம், புதூா், வேம்பாா், சூரன்குடி, சிவஞானபுரம், உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பாசி, உளுந்து, மக்காச்சோளம், மிளகாய், வெங்காயம் உள்ளிட்ட அனைத்து பயிா்களும் மழை நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் செய்வதறியாது வேதனையில் தவித்து வருகின்றனா்.

சேதம் அடைந்துள்ள பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், விளாத்திகுளம் முள்ளுா் சாலை சமீபத்தில் பெய்த மழையால் வீரபாண்டியபுரம் அருகே சாலைகள் மிக மோசமாக சேதம் அடைந்துள்ளது. இதனால் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பஸ்  போக்குவரத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று  அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Nalam Pasumaiyagam


Thoothukudi Business Directory