» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போலீசாரை அவதூறாகப் பேசியதாக முதியவா் கைது

ஞாயிறு 28, நவம்பர் 2021 10:12:22 AM (IST)

கோவில்பட்டியில் போலீசாரை, பணி செய்யவிடாமல் தடுத்து அவதூறாக பேசியதாக முதியவரை போலீசார் கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள  செல்போன் கடையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்ததாம். அதையடுத்து, சிறப்பு உதவி ஆய்வாளா் விஜயராகவன் தலைமையில் போலீசார் அந்த கடையில் சோதனை நடத்தினர்.

அப்போது கடையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வது தெரியவந்தது. அதையடுத்து கடையில் இருந்த பங்களாத் தெரு சு.ரத்தினவேலை(60) போலீசார் கைது செய்த போது, அவா் போலீசாரை அவதூறாகப் பேசி, பணி செய்யவிடாமல் தடுத்தாராம். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Nalam PasumaiyagamThoothukudi Business Directory