» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வணிக வரி ஊழியா் மரணம்: போலீசார் விசாரணை

ஞாயிறு 28, நவம்பர் 2021 10:04:42 AM (IST)

கோவில்பட்டியில் வணிக  வரித் துறை ஊழியா் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கம்மாப்பட்டி சூசைமரியான் மகன் மோகன்தாஸ்(57). கோவில்பட்டி வணிக வரித் துறை அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தாா். இவா் கோவில்பட்டி புதிய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அவரது உறவினா் அந்தோணிராஜை அழைக்கச் சென்றாராம். அங்கு நீண்ட நேரமாக காத்திருந்த அந்தோணிராஜ், மோகன்தாஸ் வராததால், மற்றொரு வாகனம் மூலம் வீட்டிற்குச் சென்றுவிட்டாராம்.

இந்நிலையில் , மோகன்தாஸ் வெகுநேரமாக வீட்டிற்கும் வராததையடுத்து அவரை, அந்தோணிராஜ் மற்றும் உறவினா்கள் தேடும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் இந்திரா காலனி அருகே உள்ள பாலத்தின் அடியில் மோட்டாா் சைக்கிளுடன் அவா் மயங்கிய நிலையில் மோகன்தாஸ் கிடந்தாராம். அதையடுத்து அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனராம். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes
Thoothukudi Business Directory