» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரூ.1கோடி முந்திரி கடத்தலில் நடந்தது என்ன? எஸ்பி ஜெயக்குமார் பேட்டி

சனி 27, நவம்பர் 2021 9:32:28 PM (IST)



தூத்துக்குடியில் ரூ.1.10கோடி முந்திரி கடத்தல் தொடர்பாக 7பேரை கைது செய்த தனிப்படை போலீசாரை எஸ்பி ஜெயக்குமர் பாராட்டினார். 

தூத்துக்குடி பிச்சையா லாரி புக்கிங் அலுவலகம் மூலமாக கண்டெய்னர் லாரி கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பகுதியிலுள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் இருந்து நேற்று (26.11.2021) ரூபாய். 1,10,00,000/- மதிப்பிலான 16 டன் முந்திரி பருப்பை ஏற்றி கொண்டு தூத்துக்குடிக்கு வரும்போது தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொட்டலூரணி விலக்கு பகுதியில் வைத்து மேற்படி லாரியை என்ற காரில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்து லாரி ஓட்டுநரான ஹரி என்பவரையும் லாரியையும் கடத்தி சென்றுள்ளனர். 

இதுகுறித்து மேற்படி லாரி புக்கிங் அலுவலக கணக்கர் தூத்துக்குடி ராஜீவ்நகரைச் சேர்ந்த முத்துகுமார் (43) என்பவர் அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். உடனடியாக இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தூத்துக்குடி ஊரக உதவி காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ்  அவர்களுக்கு லாரியை கடத்தி சென்ற மர்மநபர்களை கைது செய்து லாரியை மீட்க உத்தரவிட்டுள்ளார். 

அதன் பேரில் தூத்துக்குடி ஊரக உதவி கண்காணிப்பாளர் தலைமையில் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ், சிப்காட் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பிராங்க் ஸ்டீபன், புதுக்கோட்டை காவல் நிலைய தலைமை காவலர்கள் சக்திவேல், லெட்சுமணன், முறப்பநாடு காவல் நிலைய தலைமை காவலர் சுந்தராஜ், தட்டப்பாறை காவல் நிலைய முதல் நிலை காவலர் கணேசன், புதுக்கோட்டை காவல் நிலைய முதல் நிலைய கார்த்திகேயன், காவலர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர்கள் அடங்கிய தனிப்படையினர் லாரி மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட காரின் பதிவு எண்களை கொண்டு அங்காங்கே உள்ளே சிசிடிவி கேமரா பதிவுகளின் மூலம் தொழில்நுட்ப உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு, வாகனங்களை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா, காக்கநேரி என்ற இடத்தில் வைத்து கடத்தி சென்ற கண்டெய்னர் லாரி மற்றும் கடத்தலில் ஈடுபட்ட காரையும் கைப்பற்றி, காரில் வந்தவர்களை விசாரணை செய்ததில், தூத்துக்குடி அன்னை தெரசா நகர் செல்லப்பாண்டியன் மகன் ஞானராஜ் ஜெபசிங் (39), பிரையண்ட்நகர் சக்திவேல் மகன் விஷ்ணுபெருமாள் (26), தூத்துக்குடி, முள்ளக்காடு, நேசமணி நகர் முனியசாமி மகன் பாண்டி (21),  எம்.ஜி.ஆர் நகர் பாலம், கணபதி மகன் மாரிமுத்து (30), முறப்பநாடு முத்துவிநாயகர் கோவில் தெரு வேலு மகன் செந்தில்முருகன் (35),  பாளையங்கோட்டை,  மிலிட்டரி லைன் தெரு, துரைகிருஷ்ணன் மகன் ராஜ்குமார் (26), தூத்துக்குடி மட்டக்கடை, பிள்ளையார் கோவில்தெரு, சேகர் மகன் மனோகரன் (36) ஆகிய பேரை கைது செய்தனர்.



இவர்கள் மேற்படி சம்பவ இடத்தில் லாரி ஓட்டுநரை தாக்கி அவரை காரில் ஏற்றியும், எதிரிகளில் விஷ்ணுபெருமாள் மற்றும் பாண்டி ஆகிய இருவரும் லாரியை ஒட்டி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் உடனடியாக எதிரிகளை கைது செய்து, ரூபாய். 1,10,00,000/- மதிப்பிலான 16 டன் முந்திரி பருப்பை ஏற்றி கொண்டு வந்த ரூபாய் 10,00,000/- மதிப்பிலான கடத்தப்பட்ட லாரியையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். மேற்படி கடத்தப்பட்ட லாரியை துரிதமாக செயல்பட்டு சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களில் லாரியை பின்தொடர்ந்து விரட்டி சென்று கைப்பற்றி எதிரிகளை கைது செய்த தூத்துக்குடி ஊரக உதவி காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ்  தலைமையிலான தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory