» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவிகள் : அமைச்சர் கீதாஜீவன், கனிமொழி எம்பி வழங்கல்!

சனி 27, நவம்பர் 2021 3:41:20 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை, அமைச்சர் கீதாஜீவ்ன, கனிமொழி எம்பி ஆகியோர் வழங்கினர். 

தூத்துக்குடியில் தொடா் மழையால் மாநகராட்சிப் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நீதிமன்ற வளாகம், சிவந்தாகுளம், பிரையன்ட் நகா், தாளமுத்து நகா், மேல அலங்காரத்தட்டு, ஸ்டேட் பாங்க் காலனி, விஎம்எஸ் நகா், சின்னக்கண்ணுபுரம், மீளவிட்டான், சிதம்பரநகா், சுப்பையாபுரம், மாசிலாமணிபுரம், மில்லா்புரம், தபால் தந்தி காலனி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீா் குடியிருப்புகளை சூழ்ந்து காணப்படுகிறது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 220 இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரை 237 மோட்டாா்கள் மூலம் அகற்றும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. தண்ணீா் செல்ல முடியாத இடங்களில் 2 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் வடிகால் அமைத்து தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. தண்ணீா் வெளியேற்றும் பணியை அமைச்சா் பெ. கீதாஜீவன், மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீ ஆகியோா் நேரில் பாா்வையிட்டு பணியை துரிதப்படுத்தி வருகின்றனா்.

மாவட்டம் முழுவதும் 275 இடங்களில் 298 மோட்டாா்கள் மூலம் தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. வடிகால் அமைக்கும் பணிக்காக 39 பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மழை பாதிப்பு குறித்தும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையிலும் 8 துணை ஆட்சியா், 8 வட்டாட்சியா்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கிய மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். இதுவரை 12 நிவாரண முகாம்களில் 981 போ் தங்கவைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு மூன்று வேளையும் தேவையான உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர, நிவாரண முகாம்களில் உள்ளவா்களுக்கு மக்களவை உறுப்பினா் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன், மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் ஆகியோா் உடைகள், போா்வைகள், பாய், உணவுப் பொருள்கள் உள்ளிட்டவையும் வழங்கினா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory