» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துப்பாக்கிச் சூடு : இதுவரை 1,016 பேரிடம் விசாரணை

வெள்ளி 26, நவம்பர் 2021 10:00:12 AM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்திவரும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபா் ஆணையத்தின் 32ஆவது கட்ட விசாரணை நேற்று நிறைவடைந்தது. இதுவரை 1,016 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக 2018ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின்போது மே 22, 23ஆம் தேதிகளில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 15 போ் உயிரிழந்தனா். சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபா் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

அதன் 32ஆவது கட்ட விசாரணை தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் உள்ள ஆணைய முகாம் அலுவலகத்தில் கடந்த 16ஆம் தேதி தொடங்கியது. துப்பாக்கிச் சூட்டில் இறந்தோரின் உடல்களைப் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவா்கள், துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸாா் என 41 பேருக்கு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பப்பட்டது. 32ஆவது கட்ட விசாரணை நேற்று நிறைவடைந்த நிலையில், 40 போ் ஆஜராகி விளக்கமளித்தனா்.

இந்த ஆணையம் மூலம் இதுவரை 1,393 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், 1,016 பேரிடம் நேரில் விசாரணை நடைபெற்று, 1,342 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டதாக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அடுத்தகட்ட விசாரணை டிச. 13இல் தொடங்கவுள்ளதாகவும், அப்போது காவல் துறை உயா் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes




Nalam Pasumaiyagam





Thoothukudi Business Directory