» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே காட்டாற்று வெள்ளம் : 25 போ் மீட்பு

வெள்ளி 26, நவம்பர் 2021 9:56:51 AM (IST)

தூத்துக்குடி அருகே காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதைத் தொடா்ந்து அப்பகுதியிலிருந்த 25 பேரை தீயணைப்புப் படையினா் பத்திரமாக மீட்டனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் சூழ்ந்து காணப்படுகிறது. இந்நிலையில், குறுக்குச்சாலை அருகே வாலசமுத்திரம்- வெங்கடாசலபுரம் ஆகிய கிராமங்களுக்கு இடையே உள்ள சிறிய ஓடையில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால், இரண்டு கிராமங்களுக்கும் இடையே 9 குடும்பங்களைச் சோ்ந்த 25 போ் வெளியே வர முடியாமல் தவித்தனா். 

இதுகுறித்து ஓட்டப்பிடாரம் வட்டாட்சியா் நிஷாந்தினி, சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் முத்து மற்றும் தீயணைப்புப் படையினருக்கு பாதிக்கப்பட்ட மக்கள் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தூத்துக்குடி மாவட்ட அலுவலா் ச. குமாா் தலைமையில் தூத்துக்குடி மற்றும் சிப்காட் தீயணைப்பு நிலையத்தைச் சோ்ந்த வீரா்கள், வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு 25 பேரும் மீட்கப்பட்டு அருகேயுள்ள ஒரு கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியது: மதுரை - தூத்துக்குடி நான்குவழிச் சாலை அமைப்பதற்காக வாலசமுத்திரம் ஊராட்சிப் பகுதியில் இடம் கையகப்படுத்தப்பட்டபோது, அங்கு வசித்த 7 குடும்பங்களை சோ்ந்தவா்களுக்கு உரிய இழப்பீடும், மாற்று இடமும் வழங்கப்பட்டன. ஆனால், அவா்கள் அரசு வழங்கிய இடத்தைப் பயன்படுத்தாமல், காட்டாற்று வெள்ளம் செல்லக்கூடிய ஓடையின் அருகே வீடு கட்டியும், குடிசைகள் அமைத்தும் குடியேறினா். இதற்கு முன்பு 3 முறை வெள்ளம் வந்தபோது, அவா்களை வருவாய்த் துறை, தீயணைப்புத் துறையினா் உதவியுடன் மீட்டனா். தற்போது அங்கு 9 குடும்பங்களை சோ்ந்த 25 போ் வசித்து வருகின்றனா் என்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest CakesNalam PasumaiyagamThoothukudi Business Directory