» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மழை வெள்ளம் : ரயில்கள் சேவை பாதிப்பு

வியாழன் 25, நவம்பர் 2021 7:48:46 PM (IST)

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மழைநீர் வெள்ளம் புகுந்துள்ளதால், ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படடுள்ளது. 

தூத்துக்குடியில் இன்று பெய்த பலத்த மழை காரணமாக ரயில் நிலையத்தில் ரயில் பாதையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி வண்டி எண் 06667 தூத்துக்குடி - திருநெல்வேலி சிறப்பு ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. 

தூத்துக்குடியிலிருந்து மாலை 05.15 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண் 16235 தூத்துக்குடி - மைசூர் எக்ஸ்பிரஸ் இன்று இரவு 09.15 மணிக்கு புறப்படும்படி  நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதேபோல தூத்துக்குடியிலிருந்து இரவு மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண் தூத்துக்குடி சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (நவம்பர் 25/26) நடு இரவு 12.15 மணிக்கு புறப்படும்படி நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் இருந்து மாலை 5.15  மணிக்கு மைசூர் செல்லவேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 9 15 மணிக்கு புறப்படும், இதுபோல் தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் இரவு 8.15 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் நள்ளிரவு 12.15 நிமிடத்திற்கு புறப்பட்டு செல்லும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes
Thoothukudi Business Directory