» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கனமழை எச்சரிக்கை விடுத்தும் மாவட்ட நிர்வாகம் அலட்சியம் : மாணவ, மாணவிகள் - பெற்றோர்கள் அதிர்ச்சி!

வியாழன் 25, நவம்பர் 2021 12:20:12 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவிக்காததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

தமிழகத்தில் 5 நாள்களுக்கு பலத்த மழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மேலும் தூத்தக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன் காரணமாக தூத்துக்குடியில் இன்று காலை முதல் அடை மழை பெய்து வருகிறது. பின்னர் பிற்பகல் 12 மணியிலிருந்து இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. ஆனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. 

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை. கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளிலும், பள்ளி வளாகங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் முன்னதாகவே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்தால் இதுபோன்ற பிரச்சனைகள் எழுந்திருக்காது. மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் நிம்மதி அடைந்திருப்பர். இந்நிலையில் இன்று பிற்பகல் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


மக்கள் கருத்து

ஆண்டவன்Nov 26, 2021 - 07:31:58 PM | Posted IP 108.1*****

மக்கள் தான் தேர்ந்துடுத்த அரசியல்வாதிகள் எல்லாம் முட்டாள்

knmarNov 26, 2021 - 01:54:15 PM | Posted IP 162.1*****

smart city work very bad

உண்மைNov 26, 2021 - 06:03:24 AM | Posted IP 162.1*****

இந்த வருடமே எத்தனை மழை அறிப்புகள் ரெட் அலர்ட் பொய்த்து போனது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்

சக்திNov 25, 2021 - 10:14:56 PM | Posted IP 162.1*****

ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.... சாலைகளில் மழை நீர் வடிகால் வசதி சேவைகள் தூத்துக்குடிக்கு தேவை

RajaNov 25, 2021 - 09:01:44 PM | Posted IP 162.1*****

Tuticorin corporation and Collector totally waste.. Very worst

ஏரியா காரன்Nov 25, 2021 - 08:41:02 PM | Posted IP 173.2*****

ஊரு பூரா பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறிய கழிவுநீரும் மழைநீர் சேர்ந்து வெளிய தேங்கி இருக்கிறது.. துட்டு மாநகராட்சி பயலுக செமையா சாக்கடை அமைச்சாங்க... ஊரே நாசமாகி போகிறது காரணம் மாநகராட்சி தான்.. மாணவர்கள் மட்டுமல்ல , மக்கள் ரோட்டில் கடக்கும்போது பள்ளம் எது , speed breaker எது , சாக்கடை கால்வாய் எது என்று தெரியாமல் கடந்து வருகிறோம்...

then tamilanNov 25, 2021 - 07:41:34 PM | Posted IP 173.2*****

Worst district administration

then tamilanNov 25, 2021 - 07:41:01 PM | Posted IP 173.2*****

Worst District Administraion

SakthivelNov 25, 2021 - 07:40:52 PM | Posted IP 162.1*****

it's 100% Truly Above this

விஜய் பாலாஜி.ஆர்Nov 25, 2021 - 07:18:34 PM | Posted IP 162.1*****

மாவட்ட நிர்வாகம் மக்களின் கஷ்டம் அறிந்து செயலாற்றுவதில்லை.இன்று மாவட்ட ஆட்சியர் சற்று யோசித்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அளித்து இருக்கலாம். குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வீட்டிற்கு செல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

சக்திNov 25, 2021 - 03:02:35 PM | Posted IP 162.1*****

சொல்வதற்கு ஒன்றும் இல்லை.😥 சக்தி

ArunNov 25, 2021 - 02:22:38 PM | Posted IP 162.1*****

Well said.

SakthivelNov 25, 2021 - 01:11:13 PM | Posted IP 108.1*****

It is 100 % Truly

Raj TuticorinNov 25, 2021 - 01:03:39 PM | Posted IP 162.1*****

நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக உள்ளது. இதில் மழைநீர் சூழ்ந்து பள்ளம் மேடு தெரியாதவண்ணம் உள்ளது. கொட்டும் மழையில் மாணவர்களை வீட்டிற்கு அழைத்து செல்வது எத்துணை பாதுகாப்பாக இருக்க முடியும் மாவட்ட நிர்வாகம் சிந்திக்க வேண்டாமா?

JeorgeNov 25, 2021 - 12:48:57 PM | Posted IP 108.1*****

Tuty Collector waste

BALACHANDRABOOPATHY, ADVOCATENov 25, 2021 - 12:47:11 PM | Posted IP 162.1*****

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை. கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளிலும், பள்ளி வளாகங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பெற்றோர்கள் மாணவர்கள் கஷ்டத்தையும் நிலைமையும் மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு செயல்பட்டால் நல்லது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam PasumaiyagamBlack Forest Cakes
Thoothukudi Business Directory