» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்ஸோவில் கைது!

வியாழன் 25, நவம்பர் 2021 12:14:11 PM (IST)

கழுகுமலை அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் வன்புணர்ச்சி செய்தவர் குழந்தை திருமண சட்டம் மற்றும் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை கரடிகுளம் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் கார்த்திக் (24) என்பவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு 15 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) பத்மாவதி குழந்தை திருமண சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தார்.

மற்றொரு சம்பவம்

தூத்துக்குடி மாவட்டம், கயததார் அருகேயுள்ள இலந்தைபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் மாரிகுமார் (26). இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதே பகுதியைச் சேர்ந்த 16வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து கயத்தார் யூனியன் சமூக அலுவலர் குருலட்சுமி கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து மாரிகுமாரை தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest CakesNalam Pasumaiyagam

Thoothukudi Business Directory