» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அனுமதியின்றி எம் சாண்ட் ஏற்றி வந்த லாரி பறிமுதல் : டிரைவர் கைது

வியாழன் 25, நவம்பர் 2021 12:09:05 PM (IST)

ரீவைகுண்டம் அருகே அனுமதியின்றி லாரியில் எடுத்துச் சென்ற 3 யூனிட் எம் சாண்ட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் நேற்று (24.11.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது பேட்மாநகரம் பத்மநாபமங்கலம் சாலையில் வந்து கொண்டிருந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் உரிய அனுமதியின்றி எம் சாண்ட் மணல் வந்தது தெரியவந்தது.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியின் ஓட்டுநரான ஆத்தூர் ஆசாரிமார் தெருவை சேர்ந்த மகாராஜன் மாயாண்டி பிரபு (24) என்பவரை கைது செய்தனர். மேலும். டிப்பர் லாரியும், அதிலிருந்த 3 யூனிட் எம் சாண்ட் மணலும் பறிமுதல் செய்யப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Black Forest CakesThoothukudi Business Directory