» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தகராறு, கொலை மிரட்டல் வழக்கில் வாலிபர் கைது

வியாழன் 25, நவம்பர் 2021 12:02:16 PM (IST)

தூத்துக்குடியில் ஒருவரை வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி டவுண் டிஎஸ்பி கணேஷ் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையில் உதவி ஆய்வாளர் உதயலெட்சுமி மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஒரு கல்லூரி ஜங்ஷன் பகுதியில், சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த செல்சினி காலனி பகுதியை சேர்ந்த அந்தோணி மகன் பன்னீர்செல்வம் (34) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். 

விசாரணையில் அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பன்னீர்செல்வத்தை கைது செய்தனர். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பன்னீர்செல்வத்தின் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு கொலை மிரட்டல் வழக்கு உள்ளது குறிப்பிடதக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Nalam Pasumaiyagam






Thoothukudi Business Directory