» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நிலத்தடி நீர் உறிஞ்ச எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் : விவசாயிகள் அறிவிப்பு

வியாழன் 25, நவம்பர் 2021 11:35:02 AM (IST)சேர்வைக்காரன்மடத்தில் நிலத்தடி நீரை திருடும் நபர்கள் மீது நடவடிக்க வலியுறுத்தி விரைவில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், சேர்வைகாரன்மடம் ஊராட்சியில் நேற்று வருவாய் துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் தாசில்தார் ஜஸ்டின் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் தங்கம்மாள்புரம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு 154 மனுக்கள் பெற்று அதிகாரிகளிடம் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். 

இதனிடையே கிராம விவசாயிகள் சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில், வாழ்வாதாரப் பிரச்சனையான நிலத்தடி நீரை திருடி லாரிகளில் எடுத்து செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தாசில்தாரிடம் மனு அளித்தனர். இதற்கு பதில் கூறிய தாசில்தாரிடம் வாக்குவாதம் ஏற்பட்டது. கையூட்டு பெற்று கொண்டு எங்கள் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் கயவர்களுக்கு துணை போகிறீர்களா என விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.

கடந்த 15 வருடம் போராடியும் மற்றும் நீதிமன்ற தீர்ப்பை மீறியும் பல முறை மனு அளித்தும் நிலத்தடி நீர் திருட்டுக்கு துணை போகும்வகையில், கிடப்பில் போடப்பட்ட மனுக்களையும் சட்டமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தினர். இதையடுத்து அந்த மனுக்கள் மது உடனடியாக நடவடிக்கை எடுத்து போரை சீல் வைக்க வேண்டும் என சண்முகையா எம்எல்ஏ, தாசில்தாரிடம் வலியுறுத்தினார். 

மேலும், லஞ்சம் பெற்று கொண்டு கண்டுகொள்ளாத அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும். நிலத்தடி நீர் திருட்டு கும்பலை கைது செய்யவேண்டும். நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க தடை செய்யப்பட்ட பகுதி என்ற தகவல் பலகையை வைக்கவேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் விரைவில் முற்றுகை போராட்டம் மற்றும் சாலைமறியல் நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

BALACHANDRABOOPATHY, ADVOCATENov 25, 2021 - 12:19:18 PM | Posted IP 173.2*****

பொருள்: நிலத்தடி நீரை டிராக்டர் தண்ணீர் டேங்கர் முலம் திருட்டுத்தனமாக சட்டத்திற்கு புறம்பாக உறிஞ்சி எடுக்கும் K. செல்வின் த /பெ. கோவில்பிச்சை முத்து நகர் 6 வது மேலத்தெரு, D.No: 9/47, வசந்தம் நகர்,கூட்டாம்புளி,தூத்துக்குடி-628 103.அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளுதல் – தொடர்பாக.கடந்த 2019 முதல் 2021 ஆண்டுவரை கடந்த மூன்று வருடங்களாக இவர்கள் குடியிருந்து வரும் வீட்டில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து ராட்சத மின் மோட்டர் மூலம் நீரை திருட்டு தனமாக சட்டத்திற்கு புறம்பாக உறிஞ்சி அவருக்கு சொந்தமான டிராக்டரில் தண்ணிர் டேங்கர் (K.S . வாட்டர் சப்லை ) போன் . 9943631475 வாகன எண் . TN 72 X 4046 மூலம் சட்டத்திற்கு விரோதமாக இயற்கை கனிம வளம் நிறைந்த நிலத்தடி நீரை வர்த்தக ரீதியாக , வியாபார நோக்கத்தோடு, சுற்றுவட்டாரா பகுதில், கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்கள் , அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகளுக்கும் , தனியார் நிறுவனங்களுக்கும் , ஹோட்டல் கடைகளுக்கும் , திருமண மண்டபம் மற்றும் தொழிற்சாலைகளுக்கும் அதிகவிலைக்கு இலாபநோக்கத்தோடு தமிழக அரசை ஏமாற்றி விற்பனை செய்து வருகிறார் . இவருடைய டிரக்ட்டர் வாகன நம்பர் .TN 72 X 4046 வியாபார நோக்கில் ஒரு லோடு தண்ணிர் ரூபாய் .1000/- விதம் தினமும் 15 க்கு மேற்பட்ட தண்ணீர் லோடு இரவு -பகலும் செல்வின் மற்றும் அவரது மகன்கள் செ .தாஸ் , செ. டேனியல் விற்பனை செய்து வருகின்றனர் . மேலும் முத்துநகர், வசந்தம் நகர் , ஸ்ரீதேவி நகர் , ஸ்ரீ திருப்பதிவேங்கடாசலபதி நகர் , மீனாட்சி நகர் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் 25 அடியில் இருந்து 80 அடி வரை கீழே போனதால், இந்த இடத்தில் உள்ள வீட்டு குடியிருப்பு வாசிகள் தங்கள் வீடுகளில் உள்ள போர்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விடுவதை அறிந்து ஊர் பொதுமக்கள் சார்பாகவும் சட்டப்படி முறையான சார் ஆட்சியர் உரிமம் பெறாமல் , சட்டத்திற்கு விரோதமாக நிலத்தடி நீரை விற்பனை செய்து வரும் மேற்கண்ட எதிரிகள் மீது விசாரணை மேற்கொண்டு சட்டப்படியான குற்றவழக்கு பதிவு செய்து நிரந்தரமான நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes
Thoothukudi Business Directory