» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி, நெல்லை, குமரியில் கனமழை வாய்ப்பு : தமிழகத்தில் 5 நாள்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை

வியாழன் 25, நவம்பர் 2021 10:58:25 AM (IST)

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று பகலில் 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகிறது. இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகா்ந்து வந்து தமிழக கடலோர கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் 5 நாள்களுக்கு பலத்த மழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. 

இதன்படி தமிழ்நாட்டின் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டின, மயிலாடுதுறை ஆகிய 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏனைய வட கடலோர மாவட்டங்களின் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும். இந்நிலையில், தூத்துக்குடியில் இன்று காலை முதல் கருமேக மூட்டத்துடன் அடைமழை பெய்து வருகிறது. இதுபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.  


மக்கள் கருத்து

ஒருவன்Nov 25, 2021 - 11:14:01 AM | Posted IP 108.1*****

கனமழை எனத் தெரிந்ததும் ஏன் பள்ளிக்கு விடுமுறை விடவில்லை??? மலை பெய்து முடித்தபிறகு விடுமுறையா??? கலெக்டர் தூங்கிட்டு இருக்காங்களா ?? ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest CakesNalam PasumaiyagamThoothukudi Business Directory