» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தென்காசி டூ சென்னை 10 மணி நேரத்தில் செல்ல அரசு பஸ்: இந்திய நாடார்கள் பேரமைப்பு கோரிக்கை

வியாழன் 25, நவம்பர் 2021 10:37:41 AM (IST)

தென்காசியிலிருந்து சென்னைக்கு 10 மணி மணி நேரத்தில் செல்லும் வகையில் அரசு பேரூந்துகள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய நாடார்கள் பேரமப்பின் மாநில துணைத் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை மேலாளரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது- தமிழக அரசின் விரைவு போக்குவரத்துக் கழகத்தின் விரைவு பேரூந்துகள் சரியான நேரத்தில் இயக்கப்படுவது இல்லை. தென்காசி - சென்னை செல்வதற்கு 14 முதல் 15 மணி நேரம் பயணம் என்பதால் பொதுமக்கள் விரைவு பேரூந்தில் செல்வதை தவிர்த்து வருகிறார்கள். 

தென்காசியிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் தனியார் ஆம்னி பேரூந்துகள் 10 மணி நேரத்தில் சென்னை செல்கிறது. அதைப் போலவே தென்காசி - சென்னை செல்ல அரசு விரைவு பேரூந்துகளை பயண நேரம் 10 மணி நேரத்தில் சென்றடையும் வகையில் இயக்க வேண்டும். தென்காசி மாவட்டத்திலிருந்து இதுவரை கும்பகோணத்திற்கு அரசு பேரூந்துகள் இயக்கப்படவில்லை. எனவே தென்காசி - கும்பகோணம் செல்லும் வகையில் அரசு விரைவு பேரூந்து இயக்க வேண்டும்.

 தஞ்சை கும்பகோணம் சுற்றிலும் அதிகமான பரிகார ஸ்தலங்கள் பிரசித்தி கோவில்கள் இருந்து வருகிறது. எனவே தென்காசி மாவட்டத்திலிருந்து கும்ப கோணம் செல்வதற்கு பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் தென்காசி மாவட்டத்தில் இருந்து நாகூர் வேளாங்கண்ணி செல்லும் மக்கள் பயன்பெறும் வகையில் அரசு விரைவு பேரூந்து வேளாங்கண்ணிக்கு இயக்கப் பட்டு வந்தது. தற்போது அந்த பேரூந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது .எனவே மீண்டும் தென்காசியில் இருந்து வேளாங்கண்ணிக்கு விரைவு இயக்க வேண்டும் என்று கேட்டுக்கொள் கின்றோம் இவ்வாறு அவர் அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய நாடார்கள் பேரமப்பின் மாநில துணைத்தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார், தென்காசி வடக்கு மாவட்ட தலைவர் சூரிய பிரகாஷ், தென்காசி தெற்கு மாவட்ட தலைவர் ஹரிஹர செல்வன் . தென்காசி நகர தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட துணைத்தலைவர் கொட்டாகுளம் குளம் கணேசன், மாவட்ட துணைச் செய ஹரிகிருஷ்ணன், Intui.com மாவட்ட இளைஞரணி செயலாளர், லாளர் அச்சன்புதூர் முருகன், செங்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam
Black Forest CakesThoothukudi Business Directory