» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூய சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றம்

வியாழன் 25, நவம்பர் 2021 8:57:05 AM (IST)



தூத்துக்குடி தூய சவேரியார் ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

தூத்துக்குடி டி.சவேரியார் புரத்தில் உள்ள தூய சவேரியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று மாலை கொடியற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். பத்து நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. விழா நாட்களில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. 

ஏழாம் திருவிழா அன்று சவேரியாரின் திருஉருவ பவனி நடைபெறும் ஒன்பதாம் திருவிழா அன்று காலை புதுநன்மை திருப்பலியும், மாலை திவ்ய நற்கருணை ஆசீரும் நடைபெறும். பத்தாம் திருவிழாவான டிசம்பர் 3 ஆம் தேதி அன்று காலை பாடல் திருப்பலியும் அதனைத் தொடர்ந்து சப்பர பவனியும் நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை குழந்தை ராஜன், அருள் சகோதரிகள் மற்றும் ஊர் நிர்வாகிகள் பங்குகளை மக்கள் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Black Forest Cakes

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory