» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.26 லட்சம் மோசடி : வாலிபர் கைது

செவ்வாய் 23, நவம்பர் 2021 5:20:59 PM (IST)

தூத்துக்குடியில் அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் ரூ.26 லட்சம் பணம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி முனியசாமிபுரம் சுடலை காலனி பகுதியைச் சேர்ந்த மாடசாமி மகன் மாரி சசிகுமார் (35) என்பவர் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரிடம் விருதுநகர் மாவட்டம் சிவகாசி மருதுபாண்டியர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ரமேஷ்குமார் (36) என்பவர், தான் சென்னையில் நிருபராக இருப்பதாகவும், அங்கு தெரிந்தவர்கள் நிறைய பேர் இருப்பதாகவும், தன்னால் அரசு வேலை வாங்கி கொடுக்க முடியும் என்றும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். 

இதனை நம்பி மாரி சசிகுமார் தனக்கும், தனது மனைவி மற்றும் சகோதரிக்கும் அரசு வேலை வாங்கி தர ரூ.10லட்சமும், அதே போல் மாரி சசிகுமாரின் உறவினர்களான முத்துராஜ் என்பவரிடம் ரூ.3,25,000மும், முத்துச்சாமி என்பவரிடம் ரூ.3லட்சமும், திருஞானம் என்பவரிடம் ரூ.3,10,000மும், துரை முருகன் என்பவரிடம் ரூ.3,25,000 மும், அமுதமலர் என்பவரிடம் ரூ.3லட்சம் உன ஆக மொத்தம் ரூ.25 லட்சத்து 60 ஆயிரம் பணம் வாங்கி ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து மாரி சசிகுமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

அதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராம் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் வனிதா ராணி தலைமையில் உதவி ஆய்வாளர் ஊர்க்காவல் பெருமாள், உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், பிள்ளைமுத்து, தலைமைக் காவலர்கள் கோபால் மற்றும் பிள்ளைமுத்து ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் ரமேஷ்குமார் நிருபர் என்று கூறி மோசடி செய்தது தெரியவந்ததையடுத்து, சிவகாசி திருத்தங்கல் ரயில்வே ஸ்டேஷன் அருகே தனிப்படையினர் மேற்படி ரமேஷ்குமாரை இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரமேஷ்குமார் என்பவர் மீது விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கிலும், 2 திருட்டு வழக்குகளிலும், சிவகாசி டவுன் காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகளிலும் மொத்தம் 6 வழக்குகளிலும் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

இவரைக் கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார். வேலை தேடும் இளைஞர்கள் அனைவரும் தாங்கள் படித்த படிப்பின் மீதும், தங்கள் திறமையின் மீதும் நம்பிக்கை வைத்து போட்டித்தேர்வுகள் எழுதி வெற்றி பெற்று அரசு வேலை வாங்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும். இது போன்று அரசு வேலை வாங்குவதற்கு பணம் கொடுத்து யாரும் ஏமாற வேண்டாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

Nov 23, 2021 - 05:35:52 PM | Posted IP 162.1*****

இதேபோல் இன்னும் நிறைய போலியாட்கள், டுபாக்கூர்கள், அரசியல்வாதிகள் இருக்கின்றனர். சில பேர் புகார் கொடுக்காமல் விட்டு விடுகின்றனர்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Nalam PasumaiyagamBlack Forest CakesThoothukudi Business Directory