» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டணை : எஸ்பி எச்சரிக்கை!

செவ்வாய் 23, நவம்பர் 2021 4:38:58 PM (IST)பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டணை வரை பெற்று தரக்கூடிய வழிவகை உள்ளது. இதுகுறித்து பெண்களுக்கு கண்டிப்பான விழிப்புணர்வு வேண்டும் என எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் மாணவ, மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி கலையரங்கில் வைத்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக மாணவ, மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், தற்போது கணினி வழி குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு மாணவ, மாணவியர்களாகிய உங்களுக்கு மிக அவசியமான ஒன்றாகும். ஏனென்றால் நீங்கள் தான் இந்தியாவின் வருங்கால தூண்கள். எனவே உங்களுக்கு கணினி வழி குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு கண்டிப்பாக இருக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. இந்த வகையான பாலியல் குற்றங்களுக்கென தனியாக சட்டங்கள் உள்ளது. 

அதில் மரண தண்டணை வரை பெற்று தரக்கூடிய வழிவகை உள்ளது. இந்த பாலியல் குற்றங்கள் குறித்து பெண்களுக்கு கண்டிப்பான விழிப்புணர்வு தேவை. பெண்கள் முகம் தெரியாத நபரிடம் இருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம். மேலும் பெண்கள் தேவையில்லாமல் தங்கள் புகைப்படம் மற்றும் சுயவிபரங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்கையில் நமக்கே தெரியாமல் கணிணி வழி குற்றங்கள் நடைபெற அதிக வாய்ப்புள்ளது. 

இதுபோன்று குற்றங்கள் நடைபெற்றால் நீங்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும் சைபர் குற்ற பிரிவு காவல் நிலையத்திலோ அல்லது மாவட்டத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்திலோ புகார் அளிக்கலாம். மேலும் இலவச தொலைபேசி எண்களான அவசர போலீஸ் எண் 100, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை ஹலோ போலீஸ் எண் 95141 44100, மகளிர் உதவி எண் (Women Helpline) 1091 மற்றும் சைபர் குற்ற பிரிவு தொலைபேசி எண் 155260 ஆகிய எண்களை தொடர்பு கொண்டும் புகார் அளிக்கலாம். 

உங்கள் சுயவிவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். மேலும் காவலன் SOS செயலியை உங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து, பெண்கள் ஆபத்து காலத்தில் அந்த செயலியை பயன்படுத்தி உங்களது பாதுகாப்பை மேம்படுத்தலாம்.  ஆகவே எப்பொழுதும் மாணவ, மாணவிகளாகிய நீங்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது மிக கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையிலான சைபர் குற்ற பிரிவு போலீசார் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் நேஷனல் பொறியியல் கல்லூரி முதல்வர் காளிதாச முருகவேல், உதவி பேராசிரியர் சதீஷ்குமார், கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன், கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் கஸ்தூரி உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

சாமான்யன்Nov 23, 2021 - 04:49:22 PM | Posted IP 108.1*****

முதல்ல பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கிடைத்தது???

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Nalam PasumaiyagamThoothukudi Business Directory