» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் வேலைவாய்ப்பு : விண்ணப்பங்கள் வரவேற்பு

செவ்வாய் 23, நவம்பர் 2021 8:58:01 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக கழத்தில் பொறியாளர் அதிகாரி பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வ.உ. சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தில் காலியாக உள்ள முதன்மை பொறியாளர் அதிகாரி (Chief Engineer Officer) பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

விண்ணப்பதாரர் 25 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம் மாதம் ரூ.80,000 வழங்கப்படும்.  எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.12.2021. கல்வித் தகுதி மற்றும் மேலும் விபரங்கள் அறிய https://www.vocport.gov.in/ அல்லது https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/Ad-CEO%20posting.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 


மக்கள் கருத்து

K.saravananNov 24, 2021 - 10:19:07 PM | Posted IP 162.1*****

Need job

சுரேந்தர்Nov 24, 2021 - 12:51:53 PM | Posted IP 162.1*****

எனக்கு வேலை தேவை

PalaniNov 24, 2021 - 10:43:40 AM | Posted IP 162.1*****

Work

வேலை இல்லாதவன்Nov 23, 2021 - 09:28:10 AM | Posted IP 108.1*****

ஒரே ஒரு வேலைக்கு இவளவு பெரிய நியூஸ் ஆஹ்..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Nalam Pasumaiyagam

Black Forest Cakes

Thoothukudi Business Directory