» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பேராசிரியரை நடுக்காட்டில் இறக்கிவிட்ட அரசு பேருந்து : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

திங்கள் 22, நவம்பர் 2021 9:26:22 PM (IST)தூத்துக்குடியில் இருந்து நெல்லை சென்ற உதவி பேராசிரியரை அரசு பஸ் நடுக்காட்டில் இறக்கி விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

நெல்லை - தூத்துக்குடி சாலை மிகவும் பிரபலமானது. மிக அதிகமான பயணிகள் பயணிக்கும் இடம். இரண்டு மாவட்ட தலை நகரை இணைக்கும் இடமாக இருப்பதால் இங்குச் சாதாரண பேருந்தாக இயங்கும் பேருந்தையும் பாய்ண்ட் டூ பாய்ண்டாக இயக்கி வருகிறார்கள். அனைத்து முக்கிய கிராமங்களிலும் நெல்லை தூத்துக்குடி பேருந்து நின்று செல்ல வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆணை வாங்கியுள்ளார்கள். ஆனாலும் பல பேருந்துகள் பாய்ண்டு டூ பாய்ண்டாக இயங்கி வருகிறது. 

இதற்கிடையில் தடம் எண் 150 என்று பேருந்து மட்டும் வல்ல நாடு வசவப்பபுரம் போன்ற இடங்களில் நின்று செல்லும் பேருந்துகளாகும். ஆனால் அந்த பேருந்துகளும் முறையாக பேருந்து நிலையங்களில் நிற்பதில்லை. 22.11.2021 மதியம் தூத்துக்குடியிலிருந்து கல்லூரி உதவி பேராசிரியர் ஒருவர் வசவப்புரத்திற்கு 25 ரூபாய் டிக்கெட் எடுத்துப் பயணித்துள்ளார். வசவப்பபுரம் வந்தவுடன் அவர் எழுந்து நின்று இறங்க வேண்டும் எனக் கோரியுள்ளார். ஆனால் பேருந்து ஓட்டுனர் மற்றொரு பேருந்தை முந்தும் வேகத்தில் வசவப்பபுரத்தில் நிற்காமல் சென்றுள்ளார். நடத்துனர் விசில் அடிக்கச் சொன்னால், ஓட்டுநரிடம் கூறுங்கள் என்று சொல்ல, ஓட்டுநரோ யாரையும் கண்டு கொள்ளாமல் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஐ.ஐ.பி பள்ளி முன்பு பேருந்தை நிறுத்தவில்லை. 

மெதுவாகச் செல்கிறேன். நீங்களே இறங்கிக் கொள்ளுங்கள் என மிகவும் கறாக கூறிய ஓட்டுநர் ஓடும் பேருந்தில் இருந்தே அவரை இறக்கி விட்டுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் உதவி பேராசிரியரை மனம் நோகும்படி பேசியும் உள்ளார். மன உழச்சலுடன் மூன்று கிலோ மீட்டர் நடந்து வந்த அவர் அதன் பின் வீடு வந்து, அரசு போக்கு வரத்துப் புகார் கொடுக்கும் வாட்ஸ் அப் எண்ணிலும், வணிகம் மேலாளருக்கும் தொலைப்பேசியில் புகார் அளித்துள்ளார். ஆனால் அதற்கும் அவர்கள் பதிலளிக்கவில்லை. இதனால் நுகர்வோர் நீதி மன்றத்தினை அவர் அணுக முடிவு செய்துள்ளார்.

ஏற்கனவே நெல்லை - தூத்துக்குடி சாலையில் ஓடும் மிக அதிகமான அரசு பேருந்து பாய்ண்டு டூ பாய்ண்டு ஆகி விட்டது. அனைத்து பேருந்து நிலையத்திலும் நின்று செல்லும் ஓரிரு பேருந்தும் இதுபோல் பயணிகளை உரியப் பேருந்து நிலையத்தில் முறைப்படி நிறுத்தாமல் பதம் பார்க்கிறார்கள். கல்வி கற்ற உதவி பேராசிரியர் நிலையே இப்படி என்றால் சாதாரண பாமர மக்கள் நிலை என்னவாகும். இதே போல் பெண்கள் யாரையாவது நடுக் காட்டுக்குள் இறக்கி விட்டால் யார் பொறுப்பு. எனவே சம்பந்தப்பட்ட ஓட்டுனர் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து

SelvamNov 24, 2021 - 04:14:45 PM | Posted IP 162.1*****

Punishment

Santhosh KumarNov 24, 2021 - 06:06:50 AM | Posted IP 162.1*****

Punished driver

மலைச்சாமிNov 23, 2021 - 09:41:21 PM | Posted IP 173.2*****

ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது அப்படி ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் இதைப் பார்த்த மற்றவர்கள் இது போல் சம்பவம் திரும்ப நடக்காமல் இருக்க நினைத்து கூட பார்க்க கூடாது.

Jebaraj PNov 23, 2021 - 06:54:22 PM | Posted IP 162.1*****

அரசுப் பேருந்துகளில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. மேலும் அவை சரிவர பராமரிக்கப்படாமல் இருப்பதால் பயணிகளுக்கு காயங்களும் ஏற்பட்டு வருகிறது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam PasumaiyagamBlack Forest Cakes

Thoothukudi Business Directory