» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும் : ஆட்சியா் செந்தில்ராஜ்

சனி 6, நவம்பர் 2021 4:17:09 PM (IST)திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழா சூரசம்ஹாரம் ஆகம விதிப்படி கடற்கரையில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் செவ்வாய்க் கிழமை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட எஸ்பி ஜெயகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகைகள், மருத்துவ முகாம், அன்னதான மண்டபம். சூரசம்ஹாரம் நடக்கக்கூடிய கடற்கரைப்பகுதி, கழிப்பிடம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் ஆட்சியர் செந்தில்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மற்ற நாட்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தோம். 

கோவில் மூலம் வழங்கப்படும் அன்னதானத்தில் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் அன்னதானத்தில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 500 பக்தர்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் சுகாதார வளாகங்கள் சுத்தமாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்காலிகமாக 4 மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுழற்சி முறையில் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருந்து வருகிறார்கள். முகாமில் பக்தர்களுக்கு கொரொனா தடுப்பூசி போடவும், கொரொனா தொற்று பரிசோதனை செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை போலவே கோவிலில் அனைத்து ஆகம விதிகளையும் கடைபிடித்து சூரசம்காரம் நிகழ்ச்சியை கோவில் கடற்கரை பகுதியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி கோவிலை போன்று பொது தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் அமர்ந்து எளிய முறையில் தரிசனம் செய்வதற்கு காத்திருப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதில் பக்தர்களுக்கு இருக்கைகள், எல்.இ.டி. டி.வி., மின்விசிறி போன்ற வசதிகளும் உள்ளது. மேலும் பக்தர்கள் வசதிகளுக்காக ரூ.100, ரூ.250 கட்டண தரிசனம் செய்வதற்கு, டிக்கெட் பெற கூடுதல் கவுண்ட்டர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அறநிலையதுறை அமைச்சர், ஆணையர் வழிகாட்டுதலில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, திருச்செந்தூர் கோட்டாட்சியர் (பொறுப்பு) சுப்புலட்சுமி, டிஎஸ்பி ஹர்ஷ் சிங், கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை, தாசில்தார் சாமிநாதன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கோபாலகிருஷ்ணன், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்செல்வன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முரளிதரன், சுமதி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் மணிகண்டவேல், கிராம நிர்வாக அலுவலர்கள் வைரமுத்து, செல்வலிங்கம் உள்பட பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam

Black Forest Cakes


Thoothukudi Business Directory