» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தயார் நிலையில் பேரிடர் மீட்பு உபகரணங்கள்: எஸ்பி ஜெயக்குமார் ஆய்வு

புதன் 27, அக்டோபர் 2021 8:31:04 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தை முன்னிட்டு பேரிடர் பாதுகாப்பு உபகரணங்களின் செயல்பாடுகளை  எஸ்பி ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளதால், வெள்ளம் மற்றும் புயல் வந்தால் ஆபத்தில் சிக்கியுள்ள பொதுமக்களை காப்பாற்றும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக பேரிடர் கால மீட்புக்கு பயன்படக்கூடிய மீட்பு உபகரணங்களின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது என்பதையும், மாநில பேரிடர் மீட்பு படை பயிற்சி பெற்ற காவலர்கள் தயார் நிலையில் உள்ளனரா என்பதையும் இன்று (27.10.2021) மாலை மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் ஆய்வு செய்தார். 

இந்த பேரிடர் மீட்புப் படையினர் தூத்துக்குடி மாவட்டத்தில் தயார் நிலையில் உள்ளனர். இப்படையில் காற்றடைத்து வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள், வலுவான தூக்குப் படுக்கைகள், ஒளிரும் சட்டைகள், பாதுகாப்புச் சட்டை, கடப்பாறை, மண்வெட்டி, கோடாரி, அரிவாள், நைலான் கயிறு, பாதுகாப்பு தலைக்கவசம், மரம் அறுக்கும் இயந்திரம், ஒலி பெருக்கி உட்பட 18 வகை உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்  பேசுகையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளதையடுத்து தமிழக முதல்வர் பேரிடர் கால மீட்பு நடவடிக்கைகளுக்கு அனைத்து துறையினரும் தயார் நிலையிலிருக்குமாறு உத்தரவிட்டுள்ளார்கள், அதன்படி மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேரிடர் கால மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகள் தாழ்வான பகுதிகள், மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள் என கண்டறியப்பட்டு, அந்தந்த காவல் நிலையங்களுக்கு அறிவிப்பு கொடுத்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

எந்த வித வெள்ளம் வந்தாலும் உடனடியாக மக்களை அல்லது உயிரினங்களை காப்பாற்றுவதற்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தயார் நிலையில் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். ஆய்வின்போது தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் கண்ணபிரான், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, தூத்துக்குடி ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital



Thoothukudi Business Directory