» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

செவ்வாய் 26, அக்டோபர் 2021 12:38:41 PM (IST)தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

தமிழக அரசு லஞ்சத்தை ஒழிப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த வாரம் (26.10.2021 முதல் 01.11.2021 வரை) முழுவதும் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாக அறிவித்துள்ளது. அதன்படி இன்று (26.10.2021) தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு உதவி ஆய்வாளர் காமராஜ், மாவட்ட காவல்துறை அலுவலக நிர்வாக அலுவலர்கள் சுப்பையா, சங்கரன், சிவஞானமூர்த்தி, அலுவலக கண்காணிப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், மாரியப்பன், மாரிமுத்து, ராபர்ட், சரஸ்வதி, அந்தோணியம்மாள், அருணாச்சலம், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Nalam PasumaiyagamThoothukudi Business Directory