» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தாய்மார்கள் அனைவரும் ஆண்டுதோறும் புற்றுநோய் சோதனை செய்து கொள்ள வேண்டும்: கனிமொழி எம்பி

செவ்வாய் 26, அக்டோபர் 2021 11:23:27 AM (IST)தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற மார்பக புற்றுநோய் விழிப்பிணர்வு நிகழ்ச்சியில்அமைச்சர் கீதாஜீவன், கனிமொழி எம்பி, ஆகியோர் பங்கேற்றனர். 

மார்பகப் புற்றுநோய் குறித்து பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்விதமாக அக்டோபர் மாதத்தை மார்பகப் புற்று நோய் விழிப்புணர்வு மாதமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த மாதத்தை ‘பிங்க் மாதம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில்,கனிமொழி, எம்பி, சமூகநலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உரிய சிகிச்சைக்கு பின் குணம் அடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியவர்களுடன் இன்று (26.10.2021) கலந்துரையாடினர். 

மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, முன்னிலை வகித்தார். மேலும் புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களினையும் வழங்கினர். நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். குறிப்பாக மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் வாயிலாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்பொழுது புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்தவர்கள் நன்கு இருப்பதாக என்னிடம் கூறினார்கள். இது மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது. 

புற்றுநோய் சிகிச்சை பெற்ற பிறகு இந்நோயில் இருந்து முற்றிலும் குணமாகி வருவேன் என தன்னம்பிக்கையோடு பல தாய்மார்கள் கூறினார்கள். மேலும் சிகிச்சைக்கு பிறகு தாங்கள் செய்து கொண்டிருந்த வேலைக்கு செல்ல ஆரம்பித்துள்ளதாகவும் சிகிச்சை பெற்று குணம் அடைந்த பெண் ஒருவர் தான் தைத்த பிளவுசினை காண்பித்தார்கள். புற்றுநோய் சிகிச்சை பெற்று குணம் அடைந்து தற்பொழுது அன்றாட வாழ்க்கைக்கு சென்றுள்ளார்கள். புற்றுநோய் என வருபவர்கள் அறிகுறி தெரிந்தவுடன் வந்திருந்தால் சிகிச்சை மிகவும் எளிதாக இருக்கும். மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் மூலம் வீட்டிற்கே சென்று புற்று நோய் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. 

தாய்மார்கள் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோய் சோதனை செய்து கொள்ள வேண்டும். சிகிச்சை முடிந்த பிறகும் புற்றுநோய் வராது என யாரும் எண்ணி மருத்துவமனைக்கு செல்லாமல் இருக்க கூடாது. சுpகிச்சை முடிந்த பிறகும் அவ்வப்பொழுது வந்து சோதனை செய்ய வேண்டும்.பெண்கள் உங்கள் உடல் நலத்தை பேணி காத்து கொள்ள வேண்டும். உங்களது உடல் நலத்தில் நீங்கள்தான் அக்கறை கொள்ள வேண்டும். சிகிச்சையில் இருந்து குணமடைந்த அனைவருக்கும் நன்றி மற்றும் பாராட்டுகள். புற்றுநோய்க்கு உரிய சிகிச்சை அளித்த அனைத்து மருத்துவர்களுக்கு பாராட்டுகள் மற்றும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பேசினார். நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி முதல்வர் நேரு, துறை தலைவர் லலிதா சுப்பிரமணியன், உறைவிட மருத்துவர் சைலேஸ் ஜெயமணி, முக்கிய பிரமுகர்கள் ஜெகன் பெரியசாமி, ஆனந்தசேகரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam PasumaiyagamBlack Forest Cakes

Thoothukudi Business Directory