» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிளாஸ்டிக் பாட்டில் குளிர்பானங்களுக்கு தடை விதிக்க வேண்டும்: கலர், சோடா உற்பத்தியாளர்கள் சோரிக்கை!

திங்கள் 25, அக்டோபர் 2021 3:18:29 PM (IST)பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான குளிர்பானங்களையும் தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட சோடா மற்றும் கலர் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் நல்லகண்ணன மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: தூத்துக்குடி மாவட்ட சோடா கலர் உற்ப்பத்தியாளர்கள் சங்கம் மாவட்டத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட சிறு சிறு கண்ணாடி பாட்டிலில் சோடா கலர் தயாரிக்கும் உற்பத்தியாளர்களின் நலனுக்காக செயல்படுகிறது. சில ஆண்டுகளாக பெட்ரோலிய கழிவிலிருந்து தயாரிக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களில் குளிர்பானங்கள் விற்பனைக்கு வந்ததால், கண்ணாடி பாட்டில்களில் குளிர்பானம் தயாரிக்கும் எங்கள் தொழில் முற்றிலும் முடங்கி விட்டது. 

அதனால் நூற்றுக்கணக்கான கண்ணாடி பாட்டில்களில் குளிர்பானம் தயாரிக்கும் சிறு சிறு உற்பத்தியாளர்கள் வேலை இழந்து வறுமையில் வாடுகின்றனர். காலங்காலமாக குடிசைத் தொழிலாக கண்ணாடி பாட்டில்களில் குளிர்பானம் (கோலிசோடா) தயாரித்து விற்பனை செய்கிறோம். எங்கள் மீது எந்தவிதமான அதிருப்தியும் பொதுமக்களிடம் ஏற்பட்டதில்லை. பெட்ரோலிய கழிவிலிருந்து தயாரிக்கும் பிளாஸ்டிக் பாட்டிலில் உள்ள வேதிப்பொருளால் வேதிவினையாகி குளிர்பானங்கள் விஷத்தன்மை அடைகிறது. 

எனவே பொதுமக்கள் மற்றும் குளிர்பானங்கள் அருந்தும் சிறுவர்களின் நன்மை கருதியும் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனைக்கு சந்தைக்கு வரும் அனைத்து வகையான குளிர்பானங்களை உடனே தடை செய்ய வேண்டும். காலங்காலமாக குடிசைத்தொழிலாக கண்ணாடி பாட்டில் மாவட்டத்தில் உள்ள 500 மேற்பட்ட குடும்பத்தின் வறுமையை போக்கும் விதமாகவும், மறைமுகமாக வேலைவாய்ப்பு பெறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பங்களை வறுமையில் இருந்து மீட்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

kumarOct 25, 2021 - 04:17:44 PM | Posted IP 162.1*****

miga sari....kalam kalamaga kannadi pattilil adaithu virpanai seyyapadum kulirpanangalil entha vithamana thara prachanaigalum vanthatha theriyavillai.... kudisaitholilgalai arasu pathukakkavendum.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes
Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory