» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தல்: டி.எஸ்.எப். அணி அமோக வெற்றி!

புதன் 20, அக்டோபர் 2021 8:49:08 PM (IST)தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தலில் டி.எஸ்.எப். அணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
 
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தின் நிர்வாகிகளுக்கான தேர்தல் நாசரேத்தில் இன்று (அக்.20 ஆம் தேதி) நடைபெற்றது. இதை முன்னிட்டு காலையில் நாசரேத் மர்காஷிஸ் கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள சிற்றாலயத்தில் பிஷப் தேவசகாயம் தலைமையில் நற்கருணை ஆராதனை நடைபெற்றது. பின்னர் மர்காஷிஸ் கலைக்கல்லூரி கலை அரங்கத்தில் காலை 9 மணி அளவில் தொடங்கிய வாக்களிக்கும் பணி மாலை 5 மணி வரை நடைபெற்றது. 

இந்த தேர்தலில் டி.எஸ்.எப். மற்றும் எஸ்.டி.கே ராஜன் என 2 அணிகளாக போட்டியிட்டனர். வாக்குகள் எண்ணும் பணி மாலை 6 மணியளவில் தொடங்கியது. பின்னர் முடிவுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் டி.எஸ்.எப். அணி சார்பில் போட்டியிட்ட உப- தலைவர் வேட்பாளர் குருவானவர் தமிழ்ச்செல்வன், லே செயலாளர் வேட்பாளர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், குருத்துவ காரியதரிசி வேட்பாளர் இம்மானுவேல் வான்ஸ் டாக் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes

Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory