» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காதல் திருமணம் செய்த டிவி மெக்கானிக் தலை துண்டித்து கொடூர கொலை: பட்டப்பகலில் பயங்கரம்!!

புதன் 20, அக்டோபர் 2021 12:09:24 PM (IST)எட்டயபுரத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட டிவி மெக்கானிக் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள குமாரகிரி புதூர், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சூர்ய ராகவன் (31), டி.வி. மெக்கானிக். இவர் எட்டயபுரம் மெயின் பஜாரில் கடை நடத்தி வருகிறார். இன்று காலை 11 மணியளவில் கடையில் இருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், சூர்ய ராகவனின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.  இதுகுறித்து தகவல் அறிந்து எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், துண்டிக்கப்பட்ட சூர்ய ராகவனின் தலை மற்றும் உடலை பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சூர்ய ராகவனுக்கு கடந்த 2½ மாதங்களுக்கு முன்பு தான் காதல் திருமணம் நடந்துள்ளது. எனவே காதல் தகராறில் இந்த கொலை நடைபெற்றதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை தொடர்பாக சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் ஆனந்தராஜ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பஜாரில், பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

ராஜாOct 20, 2021 - 04:21:35 PM | Posted IP 162.1*****

so crucial

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory