» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கல்லூரி மாணவர்கள் முயற்சித்தால் தமிழரின் பெருமை வெளிவரும் : எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பேச்சு

புதன் 13, அக்டோபர் 2021 5:08:05 PM (IST)தாமிரபரணி கரை நாகரீகம் வெளிவர கல்லூரி மாணவர்கள் முயற்சி செய்ய வேண்டும் என தூத்துக்குடி காமராஜர் கல்லூரி கருத்தரங்கில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பேசினார்.

தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் வரலாற்று துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக  எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கலந்துகொண்டு பேசும் போது தாமிரபரணி கரை நாகரீகம் வெளிவர கல்லூரி மாணவர்கள் முயற்சி செய்ய வேண்டும். நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் தாமிரபரணி கரையிலும் தகவல்கள் கொட்டி கிடக்கிறது. பழங்கால தமிழர்களின் தொல்லியல் சின்னம் உள்ளது. அந்தந்த ஊரில் உள்ள வரலாற்று துறை மாணவர்கள் அவற்றை ஆவணப்படுத்த வேண்டும். இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டால் மிகவும் தொன்மையான தமிழரின் பெருமை வெளிவரும் என்றார். 

கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் டாக்டர் நாகராஜன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியை வரலாற்று துறை தலைவர் டாக்டர் தேவராஜ் தொகுத்து வழங்கினார். உதவி பேராசிரியர்கள் சுப்பிரமணியன், ரகு ஜெகதீஸ்வரி, பெருமாள், பிர்லா, கருப்பையா, மணிகண்டன், மாணவர் சந்தனகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். மாணவி துர்கா சிறப்பு விருந்தினர் அறிமுகவுரையாற்றினார். முன்னதாக மாணவி செல்வபிரியா வரவேற்றார். நிறைவாக உதவி பேராசிரியர் மாரிமுத்து நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory