» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் அரசு ஐடிஐயில் நேரடி சேர்க்கை அக்.30 வரை நீட்டிப்பு!

புதன் 13, அக்டோபர் 2021 4:18:52 PM (IST)

திருச்செந்தூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ) சேர நேரடி சேர்க்கையில் சேர்வதற்கு 30.10.2021 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடர்பாக திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் எஸ்.அருள் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்பட்டுவரும் திருச்செந்தூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ) சேர நேரடி சேர்க்கையில் சேர்வதற்கு 30.10.2021 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அரசு ஒதுக்கீட்டின் படி, திருச்செந்தூர், ஐ.டி.ஐ-யில் சேர நேரடி சேர்க்கையில் சேர்வதற்கு விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். திருச்செந்தூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் தச்சர் மற்றும் உலோகத்தகடுவேலையாள் தொழிற்பிரிவுகளில் இடம் உள்ளன. இவற்றிற்கான கல்வித்தகுதி, 8ஆம் வகுப்பு. எனவே ஐ.டி.ஐ பயிற்சியில் சேரவிரும்பும் மாணவர்கள் அனைத்து சான்றிதழ்களுடன் நேரில் வந்து பயிற்சியில் சேரவேண்டும்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் பயிற்சியாளர்களுக்கு தமிழக அரசால் மாதந்தோறும் உதவித்தொகை ரூ750/-(வருகைநாட்களுக்கு ஏற்ப), கட்டணமில்லா பேருந்து சலுகை,விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிக்கணினி, விலையில்லாபாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள், விலையில்லா சீருடை - இரண்டு செட், விலையில்லா காலணி - ஒருசெட் வழங்கப்படுகின்றன.மேலும் விவரங்களுக்கு திருச்செந்தூர்,அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அவர்களை 04639-242253 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory