» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தகராறு, கொலை மிரட்டல் வழக்குகளில் 2பேர் கைது!

புதன் 13, அக்டோபர் 2021 3:19:21 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் தவறாக பேசி கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவுப்படி, டவுண் டிஎஸ்பி கணேஷ் மேற்பார்வையில் வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தர்சிங் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது, புதிய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்தின் பேரில், அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த முனியசாமிபுரம், வஉசி நகரைச் சேர்ந்த சங்கரலிங்கம் மகன் லிங்கம் (27) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் அந்த பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையாடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதுகுறித்து வடபாகம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

எப்போதும் வென்றான் ஆதனூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்து மகன் இருளப்பசாமி (37). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆதிலிங்கம் மகன் உத்தண்டு ராம்குமார் (எ) பன்னி குமார் (23) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த இருளப்பசாமியிடம், உத்தண்டு ராம்குமார் தகராறு செய்து கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து இருளப்பசாமி அளித்த புகாரின் பேரில் எப்போதும்வென்றான் காவல் உதவி ஆய்வாளர் செந்தில்வேல் முருகன் வழக்குப்பதிவு செய்து உத்தண்டு ராம்குமார் (எ) பன்னி குமாரை கைது செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam
Black Forest Cakes
Thoothukudi Business Directory