» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி நகர் பகுதிகளில் அக்.16ம் தேதி மின்தடை!

புதன் 13, அக்டோபர் 2021 12:18:04 PM (IST)

தூத்துக்குடி நகரின் சில பகுதிகளில் வருகிற 16ம் தேதி (சனிக்கிழமை) அவசர  பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி நகர் மின் விநியோகம் செயற்பொறியாளர் (பொறுப்பு) ஜவகர் முத்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடியில் 110 கிவோ டவுன் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் காலேஜ் உயரழுத்த  மின் பாதையில் 16.10.2021  அன்று அவசர  பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுபணி மேற்கொள்ளப்பட உள்ளது. 

இதன் காரணமாக எட்டையபுரம் மெயின் ரோடு, முத்தம்மாள் காலனி, ராம் நகர், தனசேகர நகர், ஆதிபராசக்தி நகர், போல்பேட்டை மேற்கு, நேதாஜி நகர், குறிஞ்சி நகர், ஐயப்பன் நகர், இந்திரா நகர், தேவர் காலனி, மகிழ்ச்சி புரம், அண்ணா நகர் 8, 9, 10, 11, 12வது தெருக்கள், மங்களபுரம் மற்றும் அதை  சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி மின்விநியோகம் இருக்காது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Nalam PasumaiyagamThoothukudi Business Directory