» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பஸ் ஸ்டாப்பை புதுப்பித்த எஸ்ஐ: பொதுமக்கள் பாராட்டு

புதன் 13, அக்டோபர் 2021 11:53:16 AM (IST)தூத்துக்குடி அருகே சிதிலமடைந்து காணப்பட்ட பஸ் ஸ்டாப்பை புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொண்ட போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் கல்ல்லூரி அருகில் மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் பேருந்து நிறுத்தம் உள்ளது. அது கடந்த பல ஆண்டுகளாக உரிய பராமரிப்பு இல்லாமல், கிடந்தது. அதில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் தங்கியிருந்தார். மாணவ, மாணவியர் அந்த பேருந்து நிறுத்த கட்டிடத்தை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதற்கு வெளியில் நின்றே பேருந்துகளில் ஏறினார்கள். அந்த பேருந்து நிறுத்தம் அதிகமானோர் வந்து செல்லும் இடமாக இருந்து வரும் நிலையில் அவர்கள் அவதியடைந்தனர். 

இந்நிலையில், அவ்வழியே சென்ற சாயர்புரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜா, மனநலம் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு மனநல காப்பகத்தில் ஒப்படைத்தார். மேலும், பேருந்து நிறுத்த கட்டிடத்தில் கான்கிரீட் உடைந்து இருப்பதை சரி செய்து வெள்ளையடித்து பேருந்து நிறுத்ததை முழுவதும் புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளார். தனது கடமையை தாண்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டரின் சமூக சேவையை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பாராட்டி மேலும் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes
Thoothukudi Business Directory