» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிக்கன் கிரேவி சாப்பிட்ட தாய்-மகள் திடீர் மரணம் : பொதுமக்கள் அதிர்ச்சி - போலீஸ் விசாரணை!!

புதன் 13, அக்டோபர் 2021 10:22:53 AM (IST)

கோவில்பட்டியில் சிக்கன் கிரேவி சாப்பிட்ட தாய் மகள் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி  தங்கப்பநகரை சேர்ந்தவர் இளங்கோவன். லாரி டிரைவர். இவரது மனைவி கற்பகம் (33). இந்த தம்பதியரின் மகள் தர்ஷினி (7). நேற்று இரவு கடலையூர் ரோட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் சிக்கன் கிரேவி பார்சல் வாங்கி வீட்டில் வைத்து தாயும் - மகளும் சாப்பிட்டுள்ளனர். அப்போது அவர்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டில் இருந்த மாங்கோ ஜூஸ் குளிர்பானத்தை அருந்தியுள்ளனர். 

இதையடுத்து இருவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிறிது நேரத்திற்குள் இருவரது உடல் நிலை மோசமடைந்தது, தாயும் மகளும் உயிரிழந்தனர். இந்த தகவல் அறிந்து தங்கப்பன் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் மருத்துவமனை முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுஜித் ஆன்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

உயிரிழந்த இருவரது உடல்களும் உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடற்கூறு ஆய்வு அறிக்கையின் முடிவில் தாய் - மகள் மரணத்திற்கான காரணம் தெரியவரும். மேலும், இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை டிஎஸ்பி உதயசூரியன் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கோவில்பட்டியில் சிக்கன் கிரேவி சாப்பிட்ட தாய் - மகள் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

ஒருவன்Oct 13, 2021 - 04:21:21 PM | Posted IP 108.1*****

காரணம் கலப்பட மைதா மாவு, குறைந்த விலை மைதா வாங்கி வைத்து பரோட்டா செய்கின்றனர் சில கடைக்காரர்கள் .. மாதாவை சோதனை செய்யுங்கள் ... மாங்கோ ஜூஸ் அதுவும் கலப்படம் தான் , மாம்பழம் சீசன் முடிந்துவிட்டது செயற்கை மாம்பழ ஜூஸ் கார்பொரேட் கம்பெனிகள் தயாரிக்கின்றனர்..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Nalam Pasumaiyagam


Thoothukudi Business Directory