» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அஞ்சல் நிலையங்களில் நாளை ஆதார் சிறப்பு முகாம்

செவ்வாய் 12, அக்டோபர் 2021 4:54:08 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அஞ்சல் நிலையங்களில் நாளை ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா வெளியிட்ட செய்திக்குறிப்பு தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் தூத்துக்குடி தலைமை நிலையம், திருச்செந்தூர் தலைமை அஞ்சல் நிலையம், ஸ்ரீவை தலைமை அஞ்சல் நிலையம் உள்ளிட்ட 37 அஞ்சல் நிலை ஆதார் பதிவு மற்றும் திருத்தம் சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த அஞ்சலக ஆதார் சேவை மையங்களில் புதிதாக ஆதார் பதிவு செய்ய கட்டணம் ஏதும் இல்லை. குழந்தைகள் மற்றும் 10 வயதில் திருத்த வேண்டிய கட்டாய கைரேகருவிழி புதுப்பித்தல்களுக்கும் கட்டணம் இல்லை.

வயது, பிறந்த தேதி, மின்னஞ்சல், தொலைபேசி எண உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ள மட்டும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தேசிய அஞ்சல் வார விழாவை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடாக ஆழ்வார்திருநகரி, பேய்குளம், முக்காணி, புன்னக்காயல், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நாளை (13.10.2021) காலை 9.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை செயல்பட உள்ளது. பொதுமக்கள் அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு அறவிக்க்பபட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes
Thoothukudi Business Directory