» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கடையின் பூட்டை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு!

செவ்வாய் 12, அக்டோபர் 2021 10:36:15 AM (IST)

தூத்துக்குடியில் கடையின் பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம் பணம், மற்றும்  பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி, தாளமுத்துநகர் ஏ.சண்முக புரத்தை சேர்ந்தவர் பிச்சைகுட்டி மகன் முத்துசாமி (39). இவர் தாளமுத்து நகர் மெயின் ரோட்டில் மளிகை கடை வைத்துள்ளார். நேற்று காலை கடையை திறக்கச் சென்றபோது, கடையில் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. 

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் இருந்த ரொக்க பணம் ரூ 20 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகள் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து முத்துசாமி, தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam




Black Forest Cakes




Thoothukudi Business Directory