» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வ.உ.சி துறைமுகத்தில் ‘பல்நோக்கு சரக்கு போக்குவரத்து பூங்கா

திங்கள் 11, அக்டோபர் 2021 9:19:50 PM (IST)தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ‘பல்நோக்கு சரக்கு போக்குவரத்து பூங்கா’ அமைக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் "தென்னிந்தியாவின் வர்த்தக இயந்திரமாக வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 95,000 DWT கொள்ளளவு உடைய பெரியவகை கப்பல்களையும் மற்றும் சுமார் 300மீட்டர் நீளமுடைய சரக்குப் பெட்டக கப்பல்களையும் கையாளும் வகையில் 14.20 மீட்டர் மிதவை ஆழத்துடன் செயல்பட்டு வருகிறது. இத்துறைமுகத்தில் சுமார் 1.17 மில்லியன் டிஇயு சரக்குபெட்டகங்கள் கையாளும் வகையில் அமைந்துள்ள 2 சரக்கபெட்டக முனையங்களுக்கு ஏதுவாக 17 சர்வதேச சரக்குபெட்டக நிலையங்களும் மற்றும் 1 சர்வதேச சரக்குபெட்டக சேமிப்பு கிடங்கும் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு அருகாமையிலேயே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேற்கூறிய சரக்குபெட்டக முனையங்கள் மூலமாக இலங்கைக்கு அனுதினமும் மற்றும் கீழ்திசை நாடுகளுக்கு வாரந்தோறும் முக்கிய வழிதடங்கள் வழியாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடைபெறுகிறது. இந்திய பொருளாதாரம் தனது வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும் வேளையில் தமிழ்நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் வ.உ.சிதம்பரனார் துறைமுகமும் இந்திய பொருளாதாரதிற்கு இணையாக வளர்ந்து வருகிறது. இதன் காரணமாக சாலை மார்க்கமாக அனுப்படும் சரக்கு போக்குவரத்து குறிப்பிடதகுந்த வகையில் வளர்ச்சி கண்டுள்ளது. இத்துறைமுகத்தில் சாலை மார்க்கமாக 76 சதவிகித சரக்குகளும், கன்வேயர் மார்க்கமாக 20 சதவிகிதமும், குழாய்கள் மற்றும் இரயில் மார்க்கமாக 2 சதவிகிதமும் கையாளப்படுகிறது. 

இந்த துறைமுகத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் சரக்குகளை கையாளுவதற்கு வசதியாக நாள் ஒன்றுக்கு 3000க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள் செல்லும் விதத்தில் தேசிய நெடுஞ்சாலை 138 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 38 சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக திருநெல்வேலி, மதுரை மற்றும் வடதமிழ் நாட்டிலுள்ள பகுதிகளுக்கு தடையில்லா வர்த்தக போக்குவரத்து வசதி அமையப் பெற்றுள்ளது. மேலும் இந்த துறைமுகமானது மீளவிட்டான், மதுரை அகல இரயில் பாதை மூலமாக இந்தியாவிலுள்ள அனைத்து இரயில் நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக கரூர், பெங்களுர், திருப்பூர், சென்னை ஆகிய பகுதிகளுக்கு சரக்குகளை அதிவேகமாக அனுப்பும் வசதியை இத்துறைமுகம் பெற்றுள்ளது.

வ.உ.சி.துறைமுகம் 2048-49 ஆண்டில் சுமார் 125.68 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் 2048-49 ஆண்டில் இத்துறைமுகத்தில் சரக்கு பெட்டக வர்த்தகமானது சுமார் 4.3 மில்லியன் டன் அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துறைமுகத்தில் முக்கிய உற்பத்தி கேந்திரமாக அமைவதற்கு கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், ஈரோடு, பொள்ளாச்சி. கரூர், இராஜபாளையம் மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளது. இப்பகுதிகளின் மூலமாக மிக அதிக அளவில் நடைபெறும் வர்த்தக்கத்தை கருத்தில் கொண்டும் இத்துறைமுகத்தின் இயற்கையான கிழக்கு மற்றும் மேற்கு கரையோர பகுதிகளை இணைக்கும் வகையில் அமைந்துள்ளதை கருத்தில் கொண்டும் ’பல்நோக்கு சரக்குபோக்குவரத்து பூங்கா’ ஒன்று அமைப்பதற்கு இத்துறைமுகம் திட்டமிட்டுள்ளது.

இந்த பல்வேறு சரக்குபோக்குவரத்து பூங்காவில் சரக்குபெட்டகம் மற்றும் மொத்த சரக்குகளை சுலபமான விதத்தில் கையாளும் வகையில் சரக்குகளை பரிமாற்றம் செய்யவதற்குகாக அமைக்கப்படும். மேலும் இந்த பூங்காவில் குளிர்சாதன சேமிப்புகிடங்கு, சிறப்பு வசதிகளுடன் கூடிய சேமிப்புகிடங்கு மற்றும் பல்வேறு இயந்திர வசதிகளும் கூடிய சேமிப்புகிடங்களில் சரக்குகளை சுலபமாக ஒரு போக்குவரத்திலிருந்து மற்றொரு போக்குவரத்துக்கு மாற்றும் வகையில் ஏற்ப்படுதப்படும். மேலும் சுங்கதுறை அனுமதி, சுங்கதுறை அனுமதிபெற்ற சேமிப்புகிடங்குகள், பரிசோதனை வசதிகள், உற்பத்திக்கு பின் நடைபெறும் வகைப்படுத்துதல். பேக்கிங் மற்றும் இதர வசதிகளை உள்ளக்கிய மேற்கூறிய ’பல்நோக்கு சரக்குபோக்குவரத்து பூங்கா’ அமைக்கப்படும்.

புதிதாக அமைக்கப்பட உள்ள ’பல்நோக்கு சரக்குபோக்குவரத்து பூங்காவிற்காக கோயம்பூத்தூர், மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 முக்கிய நகரங்களை கண்டறிந்து ஏதாவது ஒரு நகரத்தில் அதற்கான தகுதியான நிலப்பரப்பு சுமார் 1000 ஏக்கர் தேர்வு செய்யப்படும். இந்த பூங்கா அமைப்பதற்காக வ.உ.சிதம்பரனார் துறைமுகம் தொழிற்சாலை மற்றும் வர்த்தக அமைப்புகளுடனும் மற்றும் துறைமுக பயனாளிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இதன் அடிப்படையில் தகுதியான சாலை மற்றும் இரயில் போக்குவரத்து உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

பல்வேறு ’பல்நோக்கு சரக்குபோக்குவரத்து பூங்கா’ (Multimodal Logistics Park) அமைப்பதன் மூலமாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் சரக்குபோக்குவரத்து கட்டணங்கள் மற்றும் சேமிப்புகிடங்குகளின் கட்டணங்கள் குறைக்கப்படுவதுடன் அதிகளவு சரக்கு போக்குவரத்து வாகனங்களினால் ஏற்படும் இயற்க்கை மாசுபடுதலும் குறைக்கப்படும். இந்த தருணத்தில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம். பல்வேறு சரக்கு போக்குவரத்திற்கான கட்டணங்களை புதுமையான வசதிகளின் மூலமாக குறைப்பதற்கு உறுதியளித்துள்ளது. 


மக்கள் கருத்து

ப. சுகுமார்Oct 11, 2021 - 11:20:28 PM | Posted IP 108.1*****

இவ்வளவு இருந்தும் தூ.டி துறைமுகத்தால் நகருக்கு பெரிதாக பலன் ஒன்றுமில்லை. எல்லா சரக்கு போக்குவரத்தும் தூ.டி - கோரம்பள்ளம் பைபாஸ் வழியே தான் நடக்கின்றன. இந்த துறைமுகம் மூலம் பல கோடி வர்த்தகம் நடைபெற்றாலும் தூ.டி மக்களுக்கு பெரியதாக பலன் ஏதுமில்லை. தூ.டி இப்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வந்துள்ளது. மாண்புமிகு அமைச்சர் அவர்களும் தூ.டி போர்ட் சேர்மன், தூ.டி. மாவட்ட ஆட்சியர் மற்றும் பெரியவர்கள் ஆலோசித்து தூ.டி நகர வளர்ச்சிக்கு உறுதுணை செய்தால் நல்லது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory