» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் : கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

வெள்ளி 8, அக்டோபர் 2021 4:54:35 PM (IST)தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் ஆய்வு பார்வையிட்டு செய்தனர்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.974.42 கோடி மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு பணிகள், சாலை மேம்பாடு, மாநகராட்சி பள்ளிகளை சீர்மிகு பள்ளிகளாக மாற்றி அமைத்தல், அங்கன்வாடி மையங்களை மேம்படுத்துதல், மழை நீர் வடிகால் கட்டும் பணி, மின்னாற்றல் சேமிப்பு தெருவிளக்குகள் போன்ற 66 திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி , சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் பார்வையிட்டு இன்று (08.10.2021) ஆய்வு செய்தார்கள். மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

பின்னர் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது: தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்ற வரும் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக மழைநீர் வடிகால் பணிகள், சாலை பணிகள், பாதாள சாக்கடை திட்ட ஆகிய பணிகளை வரும் மழை காலத்திற்குள் துரிதப்படுத்தி பணிகளை உரிய காலத்திற்குள் முடிக்கவும், ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக ரூ.53 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பழைய பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணிகள், ரூ.7.69 கோடி மதிப்பீட்டில் ஜெயராஜ் ரோடு பகுதியில் நடைபெற்று வரும் சீர்மிகு சாலை பணிகள், ரூ.20 கோடி மதிப்பீட்டில் எஸ்.பி.ஐ. காலணியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் ரூ.10 கோடி மதிப்பீட்டில் வி.வி.டி. மேல்நிலை நீர் தேக்க தொட்டி அருகே நடைபெற்று வரும் நகர மாநாட்டு மையம் பணிகள் உள்ளிட்ட பணிகள் இன்றைய தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. 

தொடர்ந்து திட்ட பணிகள் தொடர்பாக நகர அளவிலான ஆலோசனை மன்ற ஆய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. நடைபெற்ற வரும் திட்ட பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் காலங்களில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சீர்மிகு மாநகராட்சியாக மாற்றப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னதாக சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் மாநகராட்சி சீர்மிகு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் 1000 டேப்லேட் வழங்க உள்ளதை முன்னிட்டு இன்றைய தினம் 10 மாநகராட்சி சீர்மிகு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியின் பொழுது உயிரிழந்த 21 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினை வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தி உள்ளதை உறுதிப்படுத்தும் வகையிலும், பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போடுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், செயற்பெறியாளர் ரூபன் சுரேஷ், உதவி செயற்பொறியாளர் சரவணன், முக்கிய பிரமுகர்கள் ஜெகன் பெரியசாமி, ஆனந்தசேகரன்  மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Nalam PasumaiyagamThoothukudi Business Directory