» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடியிருப்புகளின் மட்டத்தைவிட சாலைகளின் மட்டம் அதிகரிக்கப்படக் கூடாது: ஆட்சியர் அறிவிப்பு

வியாழன் 7, அக்டோபர் 2021 5:27:06 PM (IST)

புதிய சாலைகள் அமைக்கும் போது, சாலைகளின் மேற்தளம் குடியிருப்பு பகுதிகளின் தரைமட்டத்தினை விட அதிகரிக்க கூடாது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சாலைகள் மேற்பரப்பை சுரண்டி சாலைகள் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் தொடர்பாக வழிகாட்டி நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு : சென்னை உயர்நீநிமன்ற மதுரைக்கிளை நீதிப்பேராணை வழக்கில் (எண்: 1963/2020 நாள்: 28.02.2020) ஊரகப்பகுதிகளில் குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் சாலைகளின் மேற்பரப்பை சுரண்டிவிட்டு சாலைகள் அமைத்தல் மற்றும் சாலைகள் மேம்படுத்துதல் தொடர்பாக கண்டிப்புடன் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
  • புதிய சாலைகள் அமைக்கும் போது, சாலைகளின் மேற்தளம் குடியிருப்பு பகுதிகளின் தரைமட்டத்தினை விட அதிகரிக்க கூடாது. தேவை ஏற்படின், குடியிருப்பு பகுதிகளின் தரைமட்ட அளவிற்கு சாலைகளின் மேற்பரப்பை சுரண்டி எடுத்து விட்டு பணி மேற்கொள்ள வேண்டும். 
  • ஏற்கனவே உள்ள சாலைகளை பழுதுபார்த்தல் / பலப்படுத்துதல் பணிக்கு சாலைகளின் ஏற்கனவே உள்ள மேற்தளத்தினை முற்றிலும் நீக்கி விட்டு புதிய மேற்தளத்தினை அமைக்க வேண்டும். 
  • குடியிருப்பு பகுதிகளின் தரைமட்டத்தினை கவனத்தில் கொள்ளாமல் சாலையின் மட்டம் அதிகரிக்கப்பட கூடாது.
  • சாலைப்பணிகளுக்கு மதிப்பீடு தயார் செய்யும் பொழுது மேற்படி அறிவுரைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • ஊரகப்பகுதிகள்/குடியிருப்பு பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகள் அமைத்தல்/மேம்படுத்துதல் பணிகள் வடிகால் வசதியுடன் ஏற்படுத்தப்பட வேண்டும். இதன்மூலம் மழைநீர் குடியிருப்பு பகுதிகளுக்கு நுழையாமல் முறையாக வடிவதற்கு வழிவகை ஏற்படுகிறது.
  • ஊராட்சிப்பகுதிகளில் சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளும் போது ஏற்கனவே உள்ள சாலை மட்டத்தினை உயர்த்துவதால் சாலையின் தன்மை (நடைப்பாதை, வடிகால் முதலியவை) பாதிக்கப்படுகிறது .
  • ஏற்கனவே இரண்டு, மூன்று அடுக்கு அடர்தார் தளம் போடப்பட்டு இருக்கும் சாலைகளில் மேலும் ஓர் அடுக்கு அடர்தார் தளம் அமைத்து சாலை மட்டத்தை உயர்த்த வேண்டியது இல்லை.
  • எந்த சூழ்நிலையிலும் சாலைகளின் மட்டம் அதிகரிக்கப்படக் கூடாது.
  • சாலைகளின் மேற்தள கட்டுமானத்தை மட்டும் தேவைப்படும் கனத்திற்கு சுரண்டி எடுத்து விட்டு (Milling) அதே அளவுக்கு மேற்தளம் இட வேண்டும். இது வீடுகளுக்குள் நீர்புகுவதை தடுக்கும்.
  • புதியதாக சாலைகள் அமைக்கும் போது / சாலையினை மேம்படுத்தும் போது பணியினை தொடங்குவதற்கு முன்பு ஒப்பந்ததாரர் சாலையின் மட்டத்தினை        (level marking) கண்டிப்பாக குறித்து கொள்ள வேண்டும்.
மேற்படி வழிகாட்டு நெறிமுகைளின்படி நடைபெறாத சாலைப் பணிகள் குறித்து இணையதளம் வாயிலாக (www.tnrd.gov.in) பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர்  கி.செந்தில் ராஜ்,  தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

ஆமாங்கOct 8, 2021 - 04:27:49 PM | Posted IP 162.1*****

நம்மள காமெடி பண்ணுறாங்க

சாமான்யன்Oct 7, 2021 - 08:57:01 PM | Posted IP 173.2*****

பிரையண்ட் நகர் செக் பண்ணவும்

BalaOct 7, 2021 - 06:23:45 PM | Posted IP 162.1*****

ஆர்டர் நல்லாத்தான் இருக்கு ஆனால் ஸ்மார்ட் சிட்டியில் கடைகள் அனைத்தும் பாதாளத்திற்குள் சென்று விட்டதே என்ன செய்ய

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory