» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மழை காலங்களில் மின் விபத்துக்களை தவிர்க்க வழிமுறைகள் : மின்வாரியம் அறிவுறுத்தல்

வியாழன் 30, செப்டம்பர் 2021 12:46:00 PM (IST)

மழை காலங்களில் பாதுகாப்பான மின்சாரம் வழங்கிட மின்சார பாதுகாப்பு வழிமுறைகளை பொது மக்கள் கடைப்பிடிக்க தமிழக மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் தூத்துக்குடி நகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காற்று மற்றும் மழைக்காலங்களில் மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மின் கம்பிகள், மின்பகிர்வு பெட்;டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம்
 
மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்வதோ அதனை தொட முயற்சிப்பதோ கூடாது. அது குறித்து அருகிலுள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிப்பதோடு மின் வாரிய அலுவலர்கள் வரும்வரை வேறு யாரேனும் அந்த மின் கம்பிகளை தொடாமல் பார்த்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இடி, மின்னலின் போது வெட்ட வெளியிலோ, மரங்களின் அடியிலோ, மின் கம்பங்கள், மற்றும் மின் கம்பிகள் அடியிலோ தஞ்சம் புகாதீர்கள். கான்கீரிட் கூரையிலான கட்டிடங்களில் தஞ்சமடையுங்கள். பாதுகாப்பான கட்டிடங்கள் இல்லாத பட்சத்தில் தாழ்வான பகுதியில் தஞ்சமடையுங்கள். இடி, மின்னலின் போது, "டி.வி” மிக்ஸி, கிரைண்டர், கணினி, கைபேசி மற்றும் தொலைபேசியை பயன்படுத்தக் கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில்இருக்கக்கூடாது.

மின் மாற்றிகள் மற்றும் மின்பகிர்வு பெட்டிகள் அருகே தண்ணீர் தேங்கியிருக்கும் போது அதன் அருகே செல்லக்கூடாது. அது குறித்து அருகிலுள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கவும். மழையின் போது வீடுகளில் உள்ள சுவர்களில் தண்ணீர்; கசிவு ஏற்பட்டால் அந்த பகுதியில் மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் அந்த பகுதியில் மின்சாரம் உபயோகிப்பதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். மேல் நிலை மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்ட, மின் வாரிய அலுவலர்களை அணுக வேண்டும்.
பொதுமக்கள் தங்கள் பகுதியில் பாதுகாப்பின்றி இருக்கும் உடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக இருக்கும் மின் கம்பிகள் மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் மின் பகிர்வு பெட்டிகள் போன்றவற்றை படத்துடன் முழு முகவரியை குறிப்பிட்டு 8903331912 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு குறுஞ்செய்தியாக தகவல் (SMS) தெரிவித்தால் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். மேலும் தற்போது மற்றொரு வசதியாக மின் நுகர்வோர் எளிய முறையில் தொடர்பு கொள்ள மின்னகம் (Minnagam) 24x7மணி நேர மின் நுகர்வோர் சேவை மையம் 9498794987 என்ற எணணில் பதிவு செய்தால் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam

Black Forest Cakes


Thoothukudi Business Directory