» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 98 பயனாளிகளுக்கு 1.38 கோடி நலத் திட்ட உதவிகள் : எம்பி அமைச்சர்கள், வழங்கினர்!

சனி 25, செப்டம்பர் 2021 3:43:29 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் 98 பயனாளிகளுக்கு ரூ.1.38 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்பி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர். 

தூத்துக்குடி மாவட்டஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் மூலம் 98 பயனாளிகளுக்கு ரூ.1.38 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் சமூகநலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் இன்று (25.09.2021) வழங்கினார்கள். மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ்,, சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சி.சண்முகையா (ஓட்டப்பிடாரம்), ஜீ.வி.மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களிடம் இருந்து நேரடியாக பெறப்பட்ட மனுக்களுக்குதான் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன், அனைத்து மனுக்கள் மீதும் உடனடியாக உரிய தீர்வுகாண நடவடிக்கை மேற்கொண்டார்கள். அதனைத்தொடர்ந்துநமது தூத்துக்குடி மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட பல்வேறு மனுக்களுக்கு நலத்திட்டஉதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே நமது மாவட்டத்தில் தான் பெறப்பட்ட மனுக்களில் அதிக மனுக்களுக்குதீர்வுகாணப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீர்வுகாணப்பட்டதற்கு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்மற்றும் அனைத்துதுறை அதிகாரிகளுக்கும் மிகமுக்கிய பங்கு உண்டு. இன்றையதினம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் மாவட்ட ஆட்சியரின் சமுகபொறுப்புநிதி, தொண்டு நிறுவனம், மாவட்ட பிற்படுத்தபட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் 53 பயனாளிகளுக்கு ரூ.3.36 லட்சம் மதிப்பீட்டில் தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் மாவட்டகுழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோறில் ஒருவரை இழந்த 45 குழந்தைகளுக்குதலாரூ.3 லட்சம் வீதம் ரூ.1.35 கோடிநிவாரண உதவிவழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களுக்கு தனி முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அரசுபேருந்துகளில் இலவசபயணம் செய்ய உத்தரவிட்டுள்ளார்கள். மேலும் பால், டீசல் விலைகுறைக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார்கள். பெண்கள் வருங்காலங்களில் தங்கள் சொந்தகாலில் நின்று பொருளாதாரத்தில் முன்னேறும் வகையில் தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அமைச்சர் பெ.கீதாஜீவன் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில்அமைச்சர்கள் மற்றும் அனைத்து அதிகாரிகளை உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தினை விரைந்துசெயல்படுத்திட அறிவுறுத்தியுள்ளார்கள். 562 வாக்குறுதிகளில் தற்போதுவரை 202 வாக்குறுதிகள் நிறைவேற்றி உள்ளார்கள். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் பெறப்பட்டமனுக்களைமுதல்வராக பதவியேற்றதும் அதற்கென தனிஅதிகாரியை நியமித்து அந்தந்த மாவட்டங்களில். 

பெறப்பட்ட மனுக்களின் மீதுநடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் அனைவரும் பயன்பெற்றுவருகிறார்கள். அதிக வேலைவாய்ப்பு உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விதிமுறைகளுக்கு உட்பட்டு சமூக நலத்துறையின் மூலம் மேலும் தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது. பெண்களின்வாழ்வில் பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது என தெரிவித்தார்.

அமைச்சர் அனிதாஆர்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு தொகுதியிலும் தனித்தனி பெட்டிகள் வைக்கப்பட்டு இருந்தது. வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் பொதுமக்கள் அனைவரும் தங்களின் கோரிக்கை மனுக்களை போட்டார்கள். 100 நாட்களில் இந்த மனுக்களுக்கு தீர்வுகாணப்படும் எனஅறிவித்தார்கள். பெறப்பட்ட மனுக்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு அனுப்பிமனுக்கள் மீதுநடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்கள். 

அதனடிப்படையில் இன்றையதினம் தையல் இயந்திரம் வேண்டும் எனமனுக்கள் அளித்தவர்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா காலத்தில் மக்களை பாதுகாக்கும் விதத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்தார்கள். அதில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுபெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைக்கு ரூ.3 லட்சம் அளிக்கப்படும் எனஅறிவித்தார்கள். அதனடிப்படையில் இன்றையதினம் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைக்குநிதி உதவிவழங்கப்படுகிறது. தமிழக அரசின் மூலம்; மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைத்திட தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் சு.கண்ணபிரான், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) சுப்புலட்சுமி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டஅலுவலர் (சமூகநலத்துறை) தனலட்சுமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா,முக்கியபிரமுகர்கள் ஜெகன்பெரியசாமி, ஜீவன்,தி.மு.க. மாணவரணி மாநில துணை செயலாளர் உமரிசங்கர், ராமஜெயம், பில்லா ஜெகன், வட்டாட்சியர் ஜஸ்டின் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory