» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பக்கிள் ஓடையில் தூய்மைப் பணிகள் : அமைச்சர், எம்பி துவக்கி வைத்தனர்.

சனி 25, செப்டம்பர் 2021 11:14:24 AM (IST)



தூத்துக்குடி பக்கிள் ஓடையில் தூய்மைப் பணிகளை அமைச்சர் கீதாஜீவன், கனிமொழி எம்பி ஆகியோர் துவக்கி வைத்தனர். 

தூய்மையான தூத்துக்குடி திட்டத்தின்கீழ் பக்கிள் ஒடை தூர்வாறும் பணிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி  மற்றும் சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு இன்று (25.09.2021) ஆய்வு செய்தனர். பின்னர் கனிமொழி எம்பி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தூய்மையான தூத்துக்குடி என்ற திட்டத்தின் மூலம் மாநகராட்சியின் மூலம் கடந்த ஒரு வாரமாக கால்வாயில் மண் அதிகமாக தேங்கியுள்ள பகுதிகளில் துப்புரவு பணியாளர்களின் மூலம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. 

திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் 12 ஜே.சி.பி. உதவியுடன் 200 பணியாளர்கள் சுத்தம் செய்து வருகிறார்கள். மழைக்காலம் வர இருப்பதால் பக்கிள் ஓடை வழியாகத்தான் தண்ணீர் கடலுக்கு செல்லும், பக்கிள் ஓடையை சுத்தம் செய்வதன் மூலம் மழை காலத்தில் மண் அடைப்பு ஏதும் இல்லாமல் தண்ணீர் முழுவதுமாக வெளியேறிவிடும். இந்த முழு வாரமும் தூய்மையான தூத்துக்குடி திட்டத்தின் கீழ் நீர்வழி பாதைகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு மாநகராட்சி பகுதியில் சுமார் 5000 நபர்களின் மூலம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 

எதிர் வரும் மழை காலங்களில் தெருக்களில் தண்ணீர் தேங்காமல் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ,  ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி நிர்வாகபொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி பொறியாளர் சரவணன், முக்கிய பிரமுகர் ஜெகன் பெரியசாமி, ஜீவன் மற்றும் அலுவலர்கள், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory