» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியில் மேலும் ஒரு விபத்து: பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது- டிரைவர் உயிர் தப்பினார்

வெள்ளி 24, செப்டம்பர் 2021 9:07:09 PM (IST)



தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கான தோண்டிய பள்ளத்தில்  லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிரைவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை, கழிவு நீரோடை, பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி பிரையன்ட் நகர் பகுதியில் கழிவு நீரோடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், பிரையன்ட் நகர் 12 வது தெரு கிழக்கு பகுதியில் இன்று (24.09.2021) இரவு கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது. 

அப்போது சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது லேசான காயங்களுடன் லாரி டிரைவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். உடனடியாக தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று டிரைவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த வாரம் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியின் போது 2 வடமாநில தொழிலாளர்கள் சுவர் இடிந்து உயிரிழந்தனர். 2 நாட்களுக்கு முன் மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழந்தார். தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

thoothukudiSep 25, 2021 - 08:26:58 AM | Posted IP 173.2*****

!!!!!!!!!!!!!

மக்களின் ஒருவன்Sep 24, 2021 - 09:23:31 PM | Posted IP 173.2*****

ஸ்மார்ட் சிட்டி பணியின்போது பொறியாளர் அங்கு இருந்து இருக்கமாட்டார்கள்/கவனிக்கமாட்டார்கள் அது தான் பாதுகாப்பு இல்லாத காரணம்..

என்னது ??Sep 24, 2021 - 09:21:16 PM | Posted IP 173.2*****

ஸ்மார்ட் சிட்டி சொல்லி மிகப்பெரிய கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி யா ???

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital









Thoothukudi Business Directory