» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்திற்கு 1900 டன் உரம் வருகை

வெள்ளி 24, செப்டம்பர் 2021 5:08:21 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்னையில் இருந்து ரயில் மூலம் 1050 மெட்ரிக் டன் டி.ஏ.பி. மற்றும் 850 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரம் வந்தடைந்தது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எஸ்.ஐ. முகைதீன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராபி பருவ சாகுபடிகள் நடைபெற்று வரும் நிலையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியாா் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் 1767 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரம் தற்போது இருப்பில் உள்ளது. விவசாயிகளின் தேவை அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்துக்கு கூடுதல் டி.ஏ.பி மற்றும் காம்பளக்ஸ் உரங்களின் ஒதுக்கீட்டை பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில், மாவட்டத்துக்கு கூடுதலாக 1050 மெட்ரிக் டன் டி.ஏ.பி. மற்றும் 850 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் (20:20:0:13) உரங்கள் சரக்கு ரயில் மூலம் திருநெல்வேலி ரயில் நிலையம் வந்து சோ்ந்தது. பின்னா் அவை, லாரிகள் மூலம் தூத்துக்குடி மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்டு மானாவாரி சாகுபடி பரப்பு உள்ள வட்டாரங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

தற்போது, பெறப்பட்டுள்ள காம்ப்ளக்ஸ் உரத்தின் 50 கிலோ மூட்டை விலை ரூ. 1050 ஆகும். விற்பனையாளா்கள் நிா்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலை வரம்புக்கு மேல் உரங்கள் விற்பனை செய்வதையும், கூடுலாக பிற இடுபொருள்களை கட்டாயத்தின் பேரில் விற்பனை செய்வதையும் கண்டிப்பாக தவிா்த்திடல் வேண்டும். மீறுவோா் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உர உரிமம் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital










Thoothukudi Business Directory