» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பக்கிள் ஓடையில் தவறிவிழுந்த பசு மீட்பு

வெள்ளி 24, செப்டம்பர் 2021 12:07:23 PM (IST)தூத்துக்குடியில் பக்கிள் ஓடையில் தவறிவிழுந்த பசுவை பொக்லைன் இயந்திரம் மூலம் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

தூத்துக்குடி நகரின் மத்திய பகுதியில் பக்கிள் ஓடை கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாய் மூலம் நகரில் உள்ள கழிவு நீர் கடலில் கலக்கிறது. இந்த கால்வாயில் தடுப்பு சுவர் சில பகுதி தாழ்வாக உள்ளது. இதில் அடிக்கடி பசு மற்றும் கால்நடை தவறி விழுந்து உயிரிழந்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி கே.வி.கே நகர் பகுதியில் பென்பாண்டி என்பவருக்குச் சொந்தமான கர்ப்பமான பசு ஒன்று, பக்கிள் ஒடையில் தவறி விழுந்தது. 

இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பசுமாட்டை மீட்க போராடினர். மேலும் பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு பசுமாட்டை தீயணைப்பு துறையினர் மீட்டனர். கர்ப்பம் தரித்த பசுவினை கயிறுகட்டி மேலே இழுக்கும் போது அதன் வயிறு நசுங்கியது. இதனை பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக இருந்தது. இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க பக்கிள் ஓடையில் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam


Black Forest Cakes

Thoothukudi Business Directory