» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்கு 3 நாட்கள் தடை!

வெள்ளி 24, செப்டம்பர் 2021 10:52:03 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த சில மாதங்களாக பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் கோவிலில் வழக்கமான பூஜைகள் பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடந்தது. பின்னர் ஊரடங்கு தளர்வில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று முதல் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு, அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் சாமி தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதித்தனர். சாமி தரிசனம் செய்வதற்கு 3 மணி நேரம் நீட்டிக்கப்பட்டதால், பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபட்டனர்.

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் திருச்செந்தூர் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரையிலும் 3 நாட்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோவில் நாழிக்கிணற்றில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டு உள்ளது. அங்கு பக்தர்கள் செல்லாதவாறு தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து

kumarSep 24, 2021 - 12:46:42 PM | Posted IP 108.1*****

beach, park, theateril paravatha corona kovilil irunthu mattum than paravuma???

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam
Black Forest Cakes

Thoothukudi Business Directory