» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பூபாலராயர்புரம் பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் : மாநகராட்சி ஆணையருக்கு பொதுமக்கள் கோரிக்கை

வெள்ளி 24, செப்டம்பர் 2021 10:38:39 AM (IST)

தூத்துக்குடி பூபாலராயர்புரம் பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடி பூபாலராயர்புரம் பகுதியில் குடி நீர் விநியோகம் இரண்டாக பிரிக்கப்பட்டு 1.2.3 வது தெருக்கள் ஒரு சப்ளையாகவும், 4,5,6,7,8,9,10வது தெருக்கள் இரண்டாவது சப்ளையாகவும் நடைமுறையாக தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதில் 4,5,6,7,8,9,10வது தெருவை சார்ந்த பொதுமக்கள் பலரும் தண்ணீர் சீராக கிடைக்க பெறாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதில் சுப்பையா பூங்கா நீர் தேக்க தொட்டியில் சப்ளை அதிகமாக இருப்பதால் தண்ணீர் ஏற்றி வெளியிடுவதில் ஒரு சில சிரமங்களும் தொடர்ந்து ஏற்பட்டு வருவதாக இப்பிரச்சினைக்கு காரணம் சொல்லப்பட்டு வந்தது. 

மாணிக்கபுரம் பகுதியில் நடந்துவரும் கால்வாய் அமைக்கும் பணியில் ஏற்பட்ட குடி நீர் குழாய் உடைப்பு தண்ணீர் சப்ளைக்கு தடையாக அமைந்தது. இதை சரி செய்ய காலதாமதமும் ஏற்பட்டது. இதனால் ஒரு சில தெரு மக்கள் தண்ணீர் இன்றி தினறத் தொடங்கினார்கள். இதை அறிந்த சுப்பையா பூங்கா நீர்தேக்க தொட்டி நிர்வாக அதிகாரி அவர்கள் பொதுமக்கள் நலன் கருதி இன்று ஓர் புதிய வழி முறையை அறிமுகபடுத்திக் கொண்டார். இந்த புதிய வழி முறை நமக்கெல்லாம் தெரியாத ஒரு புதிய சப்ளை முறையாக அமைந்தது.

அதாவது 4,5,6வது தெருக்கள் நடைமுறையில் மாணிக்கபுரம் சப்ளையோடு இருந்துவந்தது. ஆனால் இன்று அது புது வழி முறையில் தனி சப்ளையாக மாற்றி திறந்து விடப்பட்டுள்ளது. இந்த புதிய வழி முறையில் பொது மக்கள் தடையின்றி சீரான குடி நீரை பெற்றுக்கொண்டதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். எனவே இனிவரும் காலங்களில் பூபாலராயர்புரம் சப்ளையை மூன்றாக பிரித்து 1,2,3 வது தெருக்களை முதல் சப்ளையாகவும் , 4,5,6வது தெருக்களை இரண்டாவது சப்ளையாகவும் , 7,8,9,10வது தெருக்களை மூன்றாவது சப்ளையாகவும் மாற்றியமைத்து தண்ணீரை திறந்துவிட்டால் இப்பகுதியில் நிலவி வருகின்ற தண்ணீர் பிரச்சனைக்கு ஓர் நிரந்தர தீர்வு கிடைக்க பெறும். 

ஆகவே பொது மக்களின் பொது நலன் கருதி இந்த கோரிக்கையை மாநகராட்சி ஆணையாளர் அம்மா அவர்கள் உடனடியாக செயல்படுத்தி தரும்படி தாழ்மையுடன் வணங்கி வேண்டுகிறோம். மேலும் இத்தகவலை படிக்கின்ற அனைவரும் இதை செயல்பாட்டிற்கு கொண்டு வர உதவிடுமாறு பூபாலராயர்புரம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

ArumugamSep 25, 2021 - 08:21:23 AM | Posted IP 162.1*****

அனைத்து அதிகாரிகள் மற்றும் அனைத்து அலுவலகபணியாளர்கள் மற்றும் சமூக நலபணியாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏🙏

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory