» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விளாத்திகுளத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி: கனிமொழி எம்பி ஆய்வு

வியாழன் 23, செப்டம்பர் 2021 7:40:44 PM (IST)விளாத்திகுளத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமையும் தற்காலிக இடத்தை கனிமொழி எம்பி பார்வையிட்டார். 

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின்படி அறநிலையத்துறை சார்பாக விளாத்திகுளம் அதன் சுற்று வட்டார பகுதி மாணவ-மாணவிகளின் நீண்ட நாள் கோரிக்கையான விளாத்திகுளத்தில் அமைய இருக்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைவதற்கான தற்காலிக இடத்தை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் ஆய்வு செய்தனர். 

இந்நிகழ்வில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் தலைமையில் கிழக்கு ஒன்றிய செயலாளர், சின்னமாரிமுத்து பேரூர் செயலாளர், இரா.வேலுச்சாமி பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜாக்கண்ணு, அன்புராஜன், முத்துலட்சுமி அய்யன்ராஜ், வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் நல அணி அமைப்பாளர் ஜாகீர்உசேன், இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், பொறியாளர் பாண்டியராஜன், சென்றாயப் பெருமாள், விவசாய தொழிலாளர் அணி நீதிராஜன், ஒன்றிய கவுன்சிலர் செந்தூர்பாண்டியன் உட்பட பலர் உடன் சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes
Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory