» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் கடல் உணவுப் பொருட்களில் தொழில் முனைதல் பயிற்சி

வியாழன் 23, செப்டம்பர் 2021 5:20:26 PM (IST)தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் "கடல் உணவுப் பொருட்களில் தொழில் முனைதல்” குறித்த மூன்று நாள் தொழில்நுட்ப செயல் விளக்கப் பயிற்சி நடைபெற்றது.

தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், சென்னையிலுள்ள தொழில் முனைவோர் மேம்பாட்டு ஆணையத்தின் நிதிஉதவியுடன் 21.09.2021 முதல் 23.09.2021 வரை "கடல் உணவுப் பொருட்களில் தொழில் முனைதல்” என்ற மூன்று நாள் தொழில்நுட்ப செயல் விளக்கப் பயிற்சி தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியைச் சேர்ந்த 35 மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. 

உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர் பா. கணேசன், பயிற்சியாளர்களை வரவேற்றார். முதல்வர் (பொ) சுஜாத்குமார் பயிற்சியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியர்கள் சண்முகசெல்வ சிவசங்கரி மற்றும் தங்கசெல்வம் ஆகியோர் பங்கேற்றனர். மீன் தொழில் முனைவோரின் பண்புகள் மற்றும் கடல் உணவுப்பொருள்களில் தொழில் முனைவோhருக்கான வாய்ப்புகள் மற்றும் அவை சார்ந்த தொழில் தொடங்குவதற்கான நிதிவழிகள் என்ற தலைப்புகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெற்றன. 

இப்பயிற்சியில் பயிற்சியாளர்களுக்கு கடற்பாசி சேர்த்த அடுமனை உணவுப்பொருட்கள், மீன்சேர்த்த ரொட்டி தோய்ந்த உணவுப்பொருட்கள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு குறித்த செயல் விளக்கப் பயிற்சிகள் வழங்கப்பட்டது. இப்பயிற்சியின் நிறைவு விழாவில் கல்லூரி முதல்வர் (பொ), சுஜாத்குமார், தலைமை வகித்து பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். தூத்துக்குடி கடல் உணவு ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் துணை இயக்குநர் அசோக்குமார் பங்கேற்று மீன் உணவுப்பொருள் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகள் குறித்து விளக்க உரையாற்றினார். இப்பயிற்சியின் நிறைவு விழாவில் பங்குபெற்ற பயனாளிகள் பயிற்சி பற்றிய தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர். இப்பயிற்சியினை மீன்பதன தொழில்நுட்பத்துறை உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர் கணேசன், ஒருங்கிணைத்து நடத்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest CakesNalam Pasumaiyagam
Thoothukudi Business Directory