» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 30வது கட்ட விசாரணை நிறைவு : 100பேர் ஆஜர்

வியாழன் 23, செப்டம்பர் 2021 4:43:59 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான ஒரு நபர் ஆணையத்தின் 30வது கட்ட விசாரணை இன்று நிறைவு பெற்றது.

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடந்த துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் அதைத்தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிஅருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. ஒருநபர் விசாரணை ஆணையம் 29 கட்ட விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில் தூத்துக்குடி விருந்தினர் மாளிகையில் விசாரணை அதிகாரி அருணாஜெகதீசன் தலைமையில் 30-வது கட்ட விசாரணை கடந்த 13ம் தேதி துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற விசாரணைக்காக 122 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. 122 பேரில் 100 பேர் விசாரணை ஆணையம் முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்நிலையில் 30 வது கட்ட விசாரணை இன்று முடிவடைந்துள்ளது. விசாரணை ஆணையத்தின் 31ம் கட்ட விசாரணை அக்டோபர் மாதம் 22ம் தேதி தொடங்க உள்ளது.


மக்கள் கருத்து

Sep 23, 2021 - 07:30:36 PM | Posted IP 162.1*****

100 ஆவது கட்ட விசாரணை தொடர வாழ்த்துக்கள்... அப்படியே நீண்டு கொண்டே 50 வருஷம் ஓட்டுக ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital










Thoothukudi Business Directory